மறுநாள் காலை சிவா கிளம்பி கொண்டு இருந்தான்.மஞ்சு பாட்டி உணவு தயார் செய்து வைத்தார்.லாவண்யா அவன் போகும் வரை வெளியே வரக் கூடாது என்பது போல ரூம்க்குள்ளே உட்கார்ந்திருந்தாள்.
சிவாவிற்கு இது ஒன்னும் புதிது இல்லை என்பதால் அவன் கண்டுக்கவில்லை.மஞ்சு பாட்டி தான் லாவண்யாவை திட்டி கொண்டு இருந்தார்.
போகும் போது சிவா மஞ்சு பாட்டியிடம் ஒரு புக் போல ஒன்றை குடுத்து லாவண்யாவிடம் கொடுத்து விடும்படி கூறினான்.
வாசல் வரை சென்றவன் திரும்பி வந்து லாவண்யாவின் ரூம் அருகே நின்றபடி பாட்டி நா போய்ட்டு வரேன்.நல்லா தூங்கு பை என்று கத்திவிட்டு போனான்.
லாவண்யாவிற்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. ரூம் கதவை திறக்க சென்றவள் திடீரென அவன் அங்கு நின்றால் என்ன செய்வது என்ற யோசனையுடன் கதவை திறக்காமல் ஒரு அரை மணி நேரம் இருந்தாள்.
இனி எப்படியும் போய் இருப்பான் என்று நினைத்தபடி கதவை திறந்து வெளியே வந்தாள்.அவன் இருக்கானா என அவளது இருவிழிகளும் சுற்றி சுற்றி தேடியது.இல்லை என்பது தான் உண்மை என்றாலும் இருந்தா என்ன பன்னுவான் என நினைத்து தனக்குள் சிரித்தபடி இருந்தாள்.
இவை அனைத்தையும் மஞ்சு பாட்டி கவனித்து கொண்டு இருந்தார்.பாட்டியும் பேத்தியும் நன்றாக சாப்பிட்டனர்.லாவண்யா சாப்பிட்டு முடித்தவுடன் சிவா கொடுத்த அந்த புக்கை அவளிடம் கொடுத்தார் பாட்டி.
அது ஒரு கைட் .பெங்களூர் ல உள்ள எல்லா காலேஜ் பத்தின விவரமும் அதில் அடங்கி இருந்தது. அதை பார்த்தும் லாவண்யா கஷ்டமாக இருந்தது. இவன் இத நேத்தே நம்மகிட்ட ஏன் குடுக்கல.தேவையில்லாம ஒரு சண்டை வேற என நினைத்து கொண்டாள்.
நைட் வந்தவுடனே சாரி கேட்கனும் என நினைத்தாள்.பின் அந்த கைட்டுக்குள் மூழ்கிவிட்டாள்.
மாலையில் இருந்தே சிவா எப்ப வருவான் என தேட ஆரம்பித்தாள்.இவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்து கொண்டு இருந்த மஞ்சு பாட்டி,நா கூட இப்படி தான் உங்க தாத்தா வேலைக்கு போய்ட்டு வரும் நேரம் வாசல்ல பாத்துட்டு இருப்பேன் என்றார்.