ரவி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சிவா பஸ்சில் தான் போக வேண்டும் என அடம்பிடித்தான்.
வேற வழி இல்லாமல் இருவரும் பஸ்சிலே சென்றனர்.போகும் போதே இரண்டு juice பாட்டிலும், பிஸ்கட்டும் காலி.சேலத்தில் இறங்கும் போது மணி காலை 11.
எங்க இருந்து ஆரம்பிக்க என்ன ஏது னு சொல்லு என்றான் ரவி.
ரொம்ப சிம்பிள் டா.ஒவ்வொரு காலேஜா போய் அங்க லாவண்யா படிக்கிறாளா னு கேட்கனும் அவ்ளோ தான் என்றான் சிவா.
அய்யோ வெரி சிம்பிள் என சிரித்த ரவி அவ என்ன பால் பாக்கெட்டா ,ஏதோ பால் பாக்கெட் வந்துருச்சா னு கேக்குற மாதிரி ஈஸி யா சொல்ர.இல்ல காலேஜ் கட்டி வச்சவன் என்ன கேனையா நமக்கு இந்தாப்பா னு எல்லாத்தையும் சொல்ல என்று பொறிந்து தள்ளினான் ரவி.
அது கஷ்டம் னு இனக்கும் தெரியும் பட் நாம தான் புரிய வைக்கனும் அவங்களுக்கு என்றான் சிவா.
சரி சரி அப்ப ஒரு வாரம் இங்கயே ஒரு நல்ல லாட்ஜ் ல ரூம் போடு என்றான் ரவி.
என்னது ஒரு வாரமா?? நாம என்ன ஹனிமூனுக்கா வந்து இருக்கோம்..லூசு இன்னக்கி கண்டு பிடிக்கனும் நாளைக்கு நா சென்னை போனும் ஒரு மீட்டிங் இருக்கு என்றான் சிவா.
என்னது ஒரு நாளா .லீவ் தான இப்போ.போடா பன்னி என் தங்கச்சியலாம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது .அவளுக்காக ஒரு வாரம் செலவழிக்க மாட்ட என்று கேட்டான் ரவி.
நீ தான் பன்னி.அவ சேலத்துல இருப்பாளா னு நினைக்கிறதே ஒரு guess தான்.ஒரு வேளை அவ இங்க இல்லனா வேற ஊர் போய் தேட வேணாம் என்று புரிய வைத்தான் சிவா.
அதற்கு மேல் நேரத்தை வீணாக்க விரும்பாமல் காலேஜ் காலேஜாய் தேடினர் ரவியும் சிவாவும்.
மதியம் மூன்று மணி .கொண்டு வந்த உணவு பொருள் அனைத்தும் காலி.
நான் கூட நினைச்சேன் நம்ம பிரண்ட்க் கு நம்ம மேல ரொம்ப பாசம் னு.இப்ப தான தெரியுது இந்த தொண்ட தண்ணி வத்தி போற வேலைக்காக தான் காலையில அத்தன பாட்டில்ல juice போட்டியா என்றான் ரவி.