அன்னையின் மடி அனைத்துக்கும் மருந்தென தன்னை அனைத்த வேதனைகளைத் தாயை அனைத்துப் போக்கிக் கொண்டிருந்தான்.
வினைப்பயனின் விளைவுகள் அவனை வைத்து விளையாட விடையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.
தாயின் தோளில் சாய்ந்தபடி"அம்மா இனிமேல் என்னை ஏத்துக்கவே மாட்டாளாம்மா?வார்த்தைகளுக்கு இவ்வளவு வலிமை இருக்கும் என்று நான் நினைக்கவில்லையே.எடுத்த வேலையை சரியாக முடிக்க வேண்டும் என்ற நினைப்பில் தான் கோபத்தில் என்னென்னமோ பேசிட்டேன்ம்மா. என்னை அவள் மன்னிக்கவே மாட்டாளா?
ஆஃபீஸ்ல் வேலையை விசயத்தைத் தவிர வேறு எதையும் பேச மாட்டாம்மா.வேலைமுடிந்து வெளியில் வந்துவிட்டால் அதுவும் இல்லை. யாரோ மாதிரி என்னைப் பார்க்கிறாம்மா. எனக்கு அவள் இப்படி ஒதுக்குவது கஷ்ட்டமா இருக்கு 'என்னைக் கரெக்ட் பண்ண தான் வந்த'என்று நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு இன்னிக்கு தினமும் பேசாமலே என்னை தண்டிக்கிறாம்மா.
அவளை எனக்கும் ரெம்பப் பிடிக்கும்மா.
எங்க உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிடுவிங்கன்னு தான் அவாய்ட் பண்ணினேன்.உங்கக்கிட்ட நான் விரும்புவதை சொல்லிவிட்டு பிறகு அவளிடம் சொல்லலாம் என்று இருந்தேன் அதுக்குள்ள இப்படி நடந்திடுச்சு.
இத்தனை ஆண்டுகள் அவள் என் பின்னால் சுத்தியதற்கெல்லாம் சேர்த்து இப்போது நான் அவள் பின் சுத்திக்கிட்டு இருக்கேன்.அவ தான் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன் என்கிறாள்.ஹ்ம்ம் என்னைக்கு தான் என்னை மன்னித்து புரிஞ்சுகிட்டு ஏத்துக்கப் போகிறாளோம்மா"என்ற அவனின் ஓட்டு மொத்த கவலைகளையும் தாயிடம் இறக்கிவைத்துக் கொண்டிருந்தான்
அமல்.
அலுவலகத்தில் இருந்து சோர்வுடன் வந்த மகனைத் தோளில் சாய்த்துக் கொண்டு அவனின் புலம்பல்களைக் கோட்டுக் கொண்டிருந்தார் வைதேகி.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!