காலை துவங்கிய பயணம் மாலை நேரம் அடைந்து மகிழுந்து கோவையை நோக்கி சென்றது. இருபுறமும் புல்வெளி ஏந்திய நெடுஞ்சாலை.
சூரியகாந்தி பூக்கள் தோட்டம், காற்றாலைகள் இதமானக் குளிர் காற்று, அமைதி என ரம்மியமாக இருந்தது அந்தப் பயணம்
ஆனால் அதை ரசிக்க கூடிய மனநிலை அங்கே யாருக்கும் இல்லை. அந்த சுற்றம் மகிழ்ச்சி தரவில்லை என்றாலும் காயம்பட்ட மகிழினியின் மனதிற்கு இதமாக இருந்ததே உண்மை.
அந்த சிலமணிநேர அமைதிகூட அவளுக்கு கிடைக்கூடாது என்பது காலத்தின் கட்டாயமோ என்னவோ.
அவர்கள் இல்லதை அடைய ஒரு மணி நேரம் இருக்க அந்த ராட்சத பாலத்தில் ஏரியது வண்டி. இருபுறமும் நெடிய மரங்கள் இடையே கரும்பச்சை வண்ணத்தில் பரந்து விரிந்து இருந்த ஏரி பாலத்தின் அடியில் குறுக்கே இருந்தது.பாலத்தின் ஒருபுறத்தில் நடுவிலே இடிந்திருந்த சுவர் பழுதுபார்க்க பட்டதற்கு அடையாளமாக வண்ணம் பூசப்படாத நிலையில் சிமெண்ட் கலவையின் நிறம் தெரிந்தது. ஆம் அதே பாலம் மகிழின் வாழ்க்கையை ஒரு நெடியில் மாற்றிய இடம். அதை பார்த்தது தான் தாமதம் இடத்தை அறிந்து கொண்ட மகிழினியோ விபத்து எப்படி நடந்து என அனைவர் கூறியதும் இப்போது கண்முன்னே வர அது நிஜத்தில் நிகழ்வது போல் பிம்பம் தோன்ற அவள் அம்மா அப்பா தம்பி மூவரின் கதறல்கள் அவள் செவிகளில் ஒலிப்பதுபோல் பிரம்மையில் கரங்களால் காதுகளை மூடி கண்களையும் மூடிக்கொண்டு கத்த துவங்கிவிட்டாள் .
" ஐய்யோ..... அம்மா அப்பா.... அண்ணா கார் விழுகப்போது....ஆஆஆஆஆ..... என் மதி ...ம. மதி தண்ணீக்குள்ள விழுந்துட்டான்.... ஐய்யோ யாராவது காப்பாத்துங்க.... கார் தண்ணிக்குள்ள போகுது ...யாராவது வாங்களே.... ஆஆஆஆஆ....." எனப் பிதற்ற ஓட்டுனர் இருக்கையில் இருந்த அறிவு மகிழினியை கட்டுப்படுத்த பின்னே வர ராவணன் வண்டியை அவ்விடத்தில் இருந்து விரைவாக செலுத்தத் துவங்கினார். மகிழினியை இறுக்கிப் பிடித்து தன் தோளில் சாய்த்து முகத்தை மறைத்துக் கொள்ள அவள் விழிகள் மட்டும் அந்த இடத்தை தீண்டி வந்தது.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!