பசுமை நிறைந்த வயல்வெளிகள் .ஈரம் கொண்ட காற்று அனைத்தையும் கடந்து பேருந்து சிட்டிக்குள் நுழைந்தது .
சென்னை தனக்கே உண்டான கம்பீரத்துடன் பெரிய பெரியக் கட்டிடங்களை தாங்கி பரபரப்பான மக்களுடன் மிதமான வெப்பத்துடன் இதமான காலையை ஏந்தியிருந்தது .பேருந்து நிலைத்தில் சென்று பயணம் முடிவுறத் தங்கள் வாழ்க்கையின் அடுத்த நிலையிற்க்கு இட்டுச் செல்லும் வழியைத் தேடி பற்பல எதிர்பார்ப்புகளுடன் பேருந்திலிருந்து இறங்கி தங்கள் அடிகளை எடுத்தனர் இளைஞர்கள்.
மகிழும் அறிவும் கீழிறங்கி கவுன்சிலிங் நடைபெறும் கட்டிடத்தைத் தேடி அவ்விடத்தை அடைந்தனர். அங்கே தனது தோழி ஸ்வேதாவையும் சந்தித்துவிட்டு கல்லூரி எங்கே தேர்வு செய்யலாம் என்றக் குழப்பத்துடன் ஒருவித பயமும் தொற்றிக்கொள்ள நடப்பதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மகிழினி.
ஒருவித சலசலப்புடனேக் காலைத் துவங்கியக் கூட்டம் நண்பகல் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மாணவர்களின் பெயரும் எண்களும் அடுத்தடுத்து ஒலிக்க, விரும்பிய கல்லூரி கிடைக்குமா என்ற அச்சத்தில் சிலர் உள் செல்ல அதை அடைந்த வெற்றியில் சிலர் வெளிவந்து கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் B .மகிழினி என்று ஒலிப்பெறுக்கி அலறத் தன் கோப்புகளுடன் சென்றாள். உள்ளே சென்று அரைமணிநேரம் செல்ல உதட்டில் முறுவலுடன் கண்களில் சிறியக் குழப்பத்துடன் வெளிவந்தாள் மகிழ்.
தங்கையின் எண்ண ஓட்டத்தை அறிந்தவனாக அதைத் தெளிவுபடுத்த அருகில் சென்று வினவினான் அறிவு.
" மகிழ் !!! என்னக் காலேஜ்? எங்கே கிடைத்தது? ஏன்டா ஒருமாதிரி கன்ப்யூஸ்டா இருக்க? காலேஜ் புடிக்கவில்லையா?" என்றான்
" இல்ல அண்ணா .சென்னைல தான் ஆதவன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாராமெடிக்கல்ஸ்ல ப்பிஷிசியன் அசிஸ்டெண்ட் எடுத்திருக்கேன் இவங்க பெரிய இன்ஸ்டிடியூட் அண்ணா. ஆதவன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இருக்காங்கள்ள அவர்கள் உடையது தான்.அது ஹாப்பி தான். ஆனா அப்பா தான் சென்னையில் படிக்க ஒத்துக்குவாங்களான்னு யோசிக்கிறேன் " என்றாள் மகிழ் குழப்பத்துடன்
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!