❤துணைவன் 45❤

671 41 90
                                    

"காதலின் அவஸ்தை
எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகமல்லவா " என்றெழுதிய கவிஞர் வாலிக்கும் காதல் அதன் வலியை காட்டியிருக்குமோ!
நெருப்பையும் அமிலத்தையும் உண்டுவிட்டது போல இருக்குமாமே!
அந்த வலியைக் கொடுத்தவளிடம் மருந்தை யாசிக்கிறாரே அவர் தன் வரிகளில்.

யுவனும் தன் வலிகளுக்கான மருந்தை யாசித்துக்கொண்டு தான் இருக்கிறான் அவளின் வரவிலும் மன்னிப்பிலும் காதலிலும் . விண்ணப்பம் வார்த்தைகளாலின்றி வஞ்சியின் மனதுடன்.

" உங்க பார்வை எனக்கு புரியுது சீனியர். நான் இப்ப மட்டும் இல்ல எப்பவும் சொல்லுவேன் உங்களுக்கான என் லவ் எப்பவும் உண்மை தான். ஏன் அதை விசாலிடமும் நான் சொல்லியிருக்கேன். நீங்க என் ப்ரொப்போசலை மறுத்ததுக்கு அப்பறம் நீங்க யாரோ நான் யாரோ.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்க லைஃப்ல இருக்கும் பிரச்சனைகளை பற்றி கேள்விபட்டிருந்தாலும், அய்யோ பாவம்னு பரிதாபத்தோட கடந்திருப்பேன்.  ஆனா இவ்வளவு தூரம் ஏன் இதில் என்னை சம்பந்தபடுத்திக்கிறேன்னு தெரியுமா " என்றாள்,  எதிரில் மனச்சோர்வுடன் அமர்ந்திருக்கும் யுவன் ஆதித்யாவை நோக்கி.

அவன் ஏன் என்பது போல் நிமிர்ந்து பார்க்க , அவளருகில் அமர்ந்திருந்த விசாலை நோக்கியவள் " இவருக்காக தான். இவர் மேலிருக்க காதலுக்காக தான் . அவர் குற்ற உணர்வை போக்கனும்.  அவர் அத்தை மகளின் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைக்கிறார்.

அதற்கு நான் உதவியா இருக்கனும் நினைக்கிறேன். இவர் செய்த தப்பிற்கு பிராயச்சித்தம்னு கூட சொல்லிக்கலாம். அவர் தவறான பாதையில் இருந்தவர் தான். ஆனா பிறப்பிலே தவறானவர் இல்ல. இங்க எந்த மனிதனும் தப்பானவங்க இல்ல. இவருக்காக மட்டும் தான் உங்ககிட்ட கூட பேசிட்டு இருக்கேன்.

நீ இவ்வளவு செய்யும் அளவு அவன் ஒழுக்கசிகாமணி இல்லன்னு நீங்க நினைக்கலாம் . நானும் இவர் உத்தமன்னு சொல்லமாட்டேன். முன்னாடி சொன்ன போல பிறப்பால் எந்த மனிதனும் தவறானவன் இல்லங்கறது எவ்வளவு உண்மையோ இறக்கும் போது யாரும் உத்தமனாவே இறப்பதும் இல்ல.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now