❤துணைவன் 32❤

1K 42 282
                                    

மதிய வேளையிலும் மண்ணோடு புரளும் பனித்துளிகள்,என்றென்றும் வெள்ளைத் தாவணி மூடி வெளீரெனத் தெரியும் சூரிய ஒளிக் கதிர்கள்,அடுக்கடுக்காய் இருந்த மலை முகடுகளில் அழகாய் வளர்ந்திருந்த திணைக் கதிர்கள்,மனிதர்கள் இருப்பதன் சாட்சியாய் ஆங்காங்கே சிறு சிறு குடில்கள் என வனப்புடன் இருந்தது அந்த மலைக்கிராமம்.

அங்கிருந்த  சமதளமான ஓரிடத்தில் அந்த கிராம மக்கள் கூடியிருந்தனர். தரையில் வைக்கப்படும் பச்சை நிற திரை தாங்கிகளால் அடைக்கப்பட்ட சிறு அறைகள்  சில அமைக்கப்பட்டிருந்தன.மேசையிட்டு மருத்துவ உபகரணங்கள் வைக்கப்படிருக்க,அதில்  குளிருக்கிதமாக கம்பளிச் சட்டை அணிந்து அதன் மேல் வெள்ளை நிறத்தில் மேல் சட்டை அணிந்திருக்க அது எடுத்துக் கூறியது அவர்கள் மருத்துவர்கள் என்பதை.

அது ஒரு மருத்துவ முகாம்.ட்ரீம்ஸ் மெடிக்கல் அசோசியேசன்(Dreamz  medical association)என்று பெயரிடப்பட்டு இளைஞர்களால் அமைக்கப்பட்ட மருத்துவக்குழு. பல்வேறு மலைகிராமங்கள்,மின் வசதிகூட இல்லாத  பல குக்கிராமங்கள் என பல ஊர்களில் சென்று மருத்துவப்பணி செய்து வருகின்றனர்.இரு மாதங்களுக்கு ஒரு முறை பத்து நாட்களுக்கு ஒருஊரில் முகாம் நடக்கும்.மூன்று குழுக்களாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.வெவ்வேறு ஊர்களில் பணிபுரிபவர்களும்,சுயமாக மருத்துவமனை வைத்திருப்பவர்களும் கூட எவ்வாறாயினும் முகாமின் போது ஒன்று கூடிவிடுவர்.

இளங்கதிர் புதுமணப்பெண்  என்பதால் அவளுக்கு விடுப்புத்தரப்பட, காயத்ரிக்கும் இனியாவிற்கும் வேறு ஒரு ஊரில் முகாமில் இம்முறை பணி பிரிந்துவிட்டது. யுவன் ஆதித்யா,சுந்தர் ரவி,ராம் குமார் மூவரும் இந்த மலைகிராமத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.வெவ்வேறு ஊர்கள், பலவைகையான பிராந்திய உணவுவகைகள், அவர்களின் பழக்கவழக்கங்கள் என பல வாழ்க்கை பாடத்தையும் அந்த முகாமின் வழி அறிந்துகொண்டனர்.

இன்று முகாமின் கடைசிநாள்,பணியை முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்ப பெட்டிகளைத் தயார் செய்து விட்டு,ஒரு பாறையிலிருந்து பள்ளத்தில் செல்லும் மரத்தினின் வேரை ஆராய்வதுபோல் அதைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தான் யுவன் ஆதித்யா.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now