❤துணைவன் 24❤

850 48 51
                                    

சொல்லா காதலின் சுகத்தில் நிதம் அவன் தன்னை தொலைக்கும் வரம் ஒரு புறமாக நண்பர்களின் அன்பு வசைகளின் சுகம் ஒரு புறமாக கனா காணும் அந்த கல்லூரி காலத்தை பெற்றது வரம் என அவன் நாட்கள் அழகாக சென்றது.

ஆதவன் அன்று பேசிய பிறகு வேறு எதுவும் மகிழினியை பற்றி பேசவில்லை. அவர் கூறியது போல் எந்தவித இடையூறும் செய்யவில்லை. யுவன் அவர்களின் கல்லூரியில் பயில்வது தெரிந்தும் அவரும் அதை வெளிக்காட்டவில்லை. தனது தந்தை கோபத்தில் பேசுவாரே தவிர தவறாக எதுவும் செய்யமாட்டார் என்பது அவனுக்குத் தெரிந்ததே. அவரின் இந்த அமைதியும் அவனுக்கு அப்பாவின் மேல் வைத்த நம்பிக்கை சரியெனத் தோன்றவே அவனின் மகிழிச்சிக்கு எல்லை இல்லை.

ஆர்ப்பரிக்கும் அலைகளைக் காட்டிலும் புயலுக்கு முன் இருக்கும் அமைதியான ஆழி ஆபத்தானது என்று காலம் உணர்ந்ததை இந்தக் காதல் மனம் உணருமோ!!!

காலேஜ் கேன்டினில் இடைவெளி நேரத்தில் யுவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்க அதை கலைக்கும் பொருட்டு
வாயில் நுழையாத ஆங்கிலப் பாடலில் அவன் கைப்பேசி ஒலிக்க அதை  புன்னகை அரும்பிய முகத்துடன் ஏற்றவன் சில அடிகள் நகர்ந்துவந்து பேசினான்.

"அக்கா எப்படி இருக்கீங்க. என்ன திடீர்னு கூப்பிட்டு இருக்கீங்க. என் மச்சான் எதுவும் வம்பு பண்றானா சொல்லுங்க தூக்கிறலாம்"என்க

"டேய் விளக்கெண்ண இவ என்னை எதுவும் செய்யாமல் இருந்தால் சரி. இவரு பெரிய மல்யுத்த வீரர் எங்களைத் தூக்குறாரு. இந்த பக்கம் யாரு இருக்கிறார்கள் என்று கூட கேட்காம உன் பாட்டுக்கு நீ பாட்டுக்கு
பேசுற"என்றுஅமல் அந்தப் பக்கம் கத்த

யுவன்
"மச்சான் நீ என்ன டா அக்கா நம்பரில் பேசுற. ஏய்ய் அமல் குட் நியூஸா டா"என்று அமல் காதலை  சொல்லிவிட்டானோ என்ற ஆச்சரியத்தை கிண்டல் கலந்த தோணியில் கேட்க

அங்கே அமலோ யுவன் பேசுவதையும் அதைக் கேட்டு சங்கவி அவனைப் பார்த்து சிரிப்பதையும் கண்டு தலையில் அடித்துக் கொண்டு "ஐயா சாமி கூப்பிட்டது நான் என்னைக் கொஞ்சம் பேசவிடுடா. மெபைல் ஸ்பீக்கரில் இருக்கு. சங்கவி தான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். அவ என்னிடம் வந்து சொன்னா அதுதான் உங்கிட்ட பேசலாம் என்று கூப்பிட்டோம் அமைதியாக சொல்வதைக் கேள்"என்க அதைப் புரிந்து கொண்டவன் அமைதியாகிட சங்கவி நடந்ததை சொல்லத் துவங்கினாள்.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now