உரையாடல்களின் உன்னதம் அது நடைபெறும் வரை உணரப்படுவதில்லை. சிறுசிறு சஞ்சலங்களும் சிறகு முளைத்து பறந்துவிடுவது அங்கே தான். இருநாட்டு பிரதிநிதிகளின் ஒரு மணிநேர உரையாடல், அந்நாடுகளை உறவுநாடுகளாய் மாற்றுமேயானால், உறவுகளின் இடையே நடக்கும் ஒரு நிமிட மனம் திறந்த உரையாடலின் மதிப்பென்னவோ!
ஒரு வழிப்போக்கருக்கு நின்று தெளிவாக வழி சொல்லும் நாம், நெருங்கியே இருக்கும் உறவுகளுக்கு நிமிட நேரம் கூட ஒதுக்குவதில்லை.
திறந்துப் படிக்கப்படாத புத்தகமும் சரி, மனம் திறந்து காட்டப்படாத அன்பும் சரி இருந்தும் பயனில்லை!
மனம் திறந்த நான்கு வார்த்தைகளும், மனம் கவர்ந்த சிறு சிரிப்பும், மனம் மகிழ வைக்கும் அக்கறையும் இடைவெளியினை குறைக்குமானால், நமது மனமொத்தவர்களிடம் அதைப் பின்பற்றுவதில் தவறென்னவோ!சாம்பல் நிற சோஃபாவில் தலைசாய்த்து, சீலிங்கைப் பார்த்தவாறு தீவிர யோசனையில் இருந்தார் ஆதவன் தேவராஜ்.
அவருக்கு தேநீருடன் வந்து அமர்ந்த சரண்யா "என்னங்க எதோ டீப் திங்கிங்? " என்க, அவரோ பார்வையை மற்றும் மாற்றி சரண்யாவையே பார்த்தார். யோசனை கொண்ட அவரின் வெறித்தப்பார்வையிலும் சரண்யாவிற்கு சிறிது வெட்கம் வந்ததென்னவோ உண்மை தான்!
"ஆதவ்! என்ன அப்படி பார்க்கறிங்க "என்று அவர் தோள் தொட ,
அவரின் கரத்தினை தன் கரங்களில் அடைத்தவர் " என் மேல் உனக்கு கோபமே இல்லையா? " என்றவர் எதற்காக கேட்கிறார் என்று புரிந்து கொண்ட சரண்யா , தேநீர் குவளையை அவரிடம் தந்தார்.
" நீங்களும் கோதையும் விரும்பியது எனக்கு முன்னரே தெரியும் ஆதவ் " என்க, ஆதவன் அதிர்ச்சியில் விழிவிரித்து சரண்யாவைப் பார்க்க
" முன்னரே என்றால் நம்ம கல்யாணத்திற்கு பிறகு . யுவன் என் வயிற்றில் இருக்கும் பொழுது.
பக்கத்து ஊரில் நடப்பது கூட கணநேரத்தில் செய்தி வந்துவிடுது. நம்ம வீட்டிற்குள் நடந்த ஒரு விசயம் தெரியாமல் இருக்கும் என்று நினைக்கிறிங்களா மாமா. அன்று கோதைக்கு பிறந்தநாள். அவளை பார்க்கனும் என்று கேட்டுட்டு இருந்தேன். அம்மாவும் அத்தையும் அதட்டி அடக்கிட்டாங்க. அப்போது நான் தனியாக இருந்து அழுதுட்டு இருப்பதை பார்த்து அழகுமீனாள் அக்காவும் விசாலாட்சி அண்ணியும் நடந்ததை சொன்னாங்க .
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!