❤துணைவன் 18❤

907 54 52
                                    

இருட்டிற்கு திருஷ்டி பொட்டாக வெண்ணை உருண்டை போல் திரண்டிருந்த நிலா,பானையிலிருந்து வழிந்து சிதறியது போல் திட்டுத்திட்டாக நட்சத்திரக் கூட்டங்கள் பூலோகத்திற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது .

தினமும் இந்த இரவின் கோலம் இயல்பே!!!

என்றும் இல்லாத திருநாளாக இன்று ஏனோ யுவனின் மனம் இதை விசித்திரமாய் ரசித்தது. காண காணத் திகட்டாமல் இரவை பால்கனியிலிருந்து ரசித்தான்.

இயல்பை மாற்றி சிறு துரும்பையும் ரசிக்க வைப்பது காதலின் மாயமோ!!!

அதை கலைக்கும் விதமாக கைப்பேசி அழைக்க அதை எடுத்தவன் சிரிப்புடன் உரையாடினான்.

"   ஹாய்... அமல் எப்படி டா இருக்க" என்று அவன் தூரத்து சொந்தமான அவன் அத்தை மகனிடம் பேச்சைத் துவங்கினான்.

"  டேய்... விளக்கெண்ண... வந்தேன்னு வை செத்தடா நீ... என்ன யுவன் இங்க வந்தத சொல்லவே இல்ல . நீ எல்லாம் நண்பனாடா...இப்போது தான் அம்மா சொன்னாங்க.. நானா கூப்பிட்டாதான் பேசுவிங்களோ... இப்ப எங்க டா இருக்க " என மூச்சு விடாமல் பொரிந்துவிட்டான்...

" டேய் என்ன திட்டுறேன்னு மூச்சு முட்டி செத்துறாத டா...மறந்துட்டேன் டா சொல்ல.. எனக்கு சுத்தமா நினைவிலே இல்ல.. இன்னும் நாங்க ஊருக்கு கிளம்பல அமல். இங்க தான் கெஸ்ட் ஹவுஸில் இருக்கோம்.. மச்சி  நானே உன்னைப் பார்க்கனும்னு நினைத்தேன் டா நாளை மீட் பண்ணலாம் சரியா " என்க 

அமல் " ஏன்டா மறக்கற அளவுக்கு சார்க்கு என்ன வேலை .சரி இப்பயாவது பார்க்னும்னு தோனுச்சே.. சரி டா நாளைப் பார்க்கலாம்" என்று சில நிமிடங்கள் இயல்பாகப் பேசிவிட்டு வந்து கட்டிலில் பொத்தென விழுந்தான் யுவன்.

மெத்தையில் விழுந்தவன் தனது அழைப்பேசியை எடுத்து ரீசன்ட் ஆப்ஸிற்குள் நுழைய அதில் புகைப்படங்கள் கோப்புகளில் முதல் படமாக இருந்த மகிழினி மதியுடன் இருக்கும் படத்தை எடுத்துப் பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான் . அவனுக்குள்ளோ மனதிற்கும் மூளைக்கும் கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now