தன் மனதில் நின்றவன் அவள் கண்முன்னே தெரிய,அவன் நிம்மதியைப் பறித்துக் கொண்டு பாதுகாப்பு உணர்வுடன் இவள் நிம்மதியாய் மயங்கிவிட்டாள்.
நண்பர்களுடன் பேசிவிட்டு காயத்ரியை சமாதானம் செய்ய வந்தவன்,அவள் மாடிப் படிகளில் தட்டுத்தடுமாறி ஏறியதைக் கண்டவன் அவள் பின்னே வர,ஓரிடத்தில் அவள் மயங்கிச் சரியப் பின்னிருந்துப் பிடித்துக் கொண்டான்.
அவளை மடியில் ஏந்திக் கொண்டு அமர்ந்து விட்டவனுக்கோ என்ன செய்வதென்று புரியாமல் அவளை தட்டித் தட்டி எழுப்பிப் பார்த்தவன் தன் நண்பர்களுக்கு அழைத்தான்.
ராமின் கரகரத்தக்குரலில் ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்ட சுந்தர் ரவி யுவனிடம் சொல்லி பெண்களையும் அழைத்துக்கொண்டு ராம் சொல்லிய இடத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் பார்த்ததோ கலங்கிச் சிவந்த கண்களுடன் அழுது வடிந்து கொண்டிருக்கும் ராமின் முகமும் அவன் மடியில் படுத்திருக்கும் காயத்ரியையும் தான்.
"ஏய் பயப்படுத்தாதம்மா. ப்ளீஸ் எழுந்திரு காயு!!விளையாடாத டி. கண்ணைத் திறந்துப் பாரும்மா. எனக்கு பயமா இருக்கு. என் கண்ணுல தங்கம்ல பயப்படுத்தாம எழுந்திடும்மா"என்று அவள் கன்னங்களைத் தட்டித் தட்டிப் புலம்பி அழுது கொண்டிருந்தான் ராம் குமார்.
அவனைப் பார்த்து அருகில் வந்தவர்கள் என்ன ஆனது??எப்படி!! ஏன்??என்று மாற்றி மாற்றி கேள்விகள் தொடுக்க அவன் அசைவதாய் இல்லை அப்படியே புலம்பிக் கொண்டிருந்தான்.
இது சரியாக வராது என்று நினைத்த யுவன் ராமை உலுக்கி"டேய் லூசுப் பயலே!!!முதலில் அழுவதை நிறுத்து. இப்படியே இருந்தால் சரிவராது நீ அவளைத் தூக்கு. அந்த அறை வெறுமையாகத் தான் இருக்கு பார். நாம் மேனேஜரிடம் சொல்லிக் கெள்ளலாம். சுவி நீ சென்று அவரிடம் பேசு. இளா நீ நம்ம மஞ்சு மேமிடம் சொல். வேறு யாருக்கும் தெரியாமல் சொல். நீ என்னடா ராம் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கத் தூக்குடா"என்று அவனைப் பார்த்த ராமிடம் சொல்ல அவனும் காயத்ரியை கைகளில் ஏந்தி அந்த அறையில் இருந்த படுக்கையில் கிடத்தினான்.
VOUS LISEZ
தோழனே துணையானவன் (completed)
Roman d'amourஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!