❤துணைவன் 36❤

868 44 109
                                    

"காலை வணக்கம் மனைவியாரே! " சொல்லிக்கொண்டே உள்ளே வந்த யுவன் ஆதித்யா வாய்விட்டு சிரித்தான்.

உடற்பயிற்சி முடித்துவிட்டு ப்ராணயாமம் மேற்கொண்டிருந்த மகிழினி கணவனின் சிரிப்பு சத்தத்தில் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து முறைத்தவாறு புருவத்தினை உயர்த்தி 'என்ன? ' என்பது போல் கேட்க, அதன் அழகில் மயங்கியவனின் சிரிப்பு நைந்து புன்னகைப் பிறந்தது .

அவளின் முறைப்பான பார்வைக் கண்டு மேலும் முறுவலித்தவன்
" அம்மணி டைம் என்ன தெரியுமா? ப்ரேக் ஃபார்ஸ்ட் சாப்பிட போகும் டைமில் வொர்க் அவுட் பண்றது ஆர்மேனியா வழக்கமோ? " என்று கிண்டலடத்துக் கொண்டே அவளுக்கென எடுத்து வந்த காலை பானத்தை மேசையில் வைத்தவன்,  அனிந்திருந்த டிசர்டை கலட்டிவிட்டு தூவாளை எடுத்துக் கொண்டு குளிக்கத் தயாரானான்.

வழமை போலவே காலை எழுந்த யுவன், தனதருகில் குழந்தை போல் உறங்கும் காதல் மனைவியை ரசித்துவிட்டு, அவளை எழுப்ப மனம் வராது நடைபயிற்சி மேற்கொள்ள சென்றுவிட்டான். வீட்டாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன் தானும் காலை பானம் அருந்திவிட்டு, மகிழினிக்கும் எடுத்துவந்தவன் தான், எட்டு மணி போலாக ப்ராணயாமம் செய்து கொண்டிருப்பவளை பார்த்து சிரித்தது.

அவன் கிண்டலைக் கேட்டவாறே பயிற்சியை முடித்துக் கொண்ட மகிழினி, யோகா விரிப்பினை சுருட்டியவாறு " ப்ச்  டீஸ் பண்ணாதே யுவி!  மார்னிங் வொர்க்  அவுட் பண்ணலனா அன்னிக்கு டே ஃபுல் லேசி ஃபீல் ஆகுது " என்று சிணுங்கியவள்

"டெய்லி வொர்க் அவுட் பண்றதால் தான் என்ன ஃபிட் ஆ வச்சிருக்கேன் " என்க

போலியாக அதிர்ந்தவன் தன் வாயை மூடிக் கொண்டு சிரிக்க, அவன் நக்கல் புரிந்தவள் தோளில் ஒரு அடி வைத்து
" நான் தான் தூங்கிட்டேன்னா உனக்கு எழுப்பவதற்கு என்ன யுவி? எல்லாரும் என்ன நினைப்பாங்க? இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் தெரியுமா? " என்று கேட்க

அதற்கும் முறுவலித்தவன், மேசையில் வைத்த குவளையை அவள் கையில் தந்தவிட்டு,அவள் தோளைச்சுற்றி கைப்போட்டுக் கொண்டு, பால்கனி நோக்கி அழைத்துச் சென்று " நைட் முழுதும் என் அக்கா கூட அரட்டை அடுச்சிட்டு லேட் ஆ தான் தூங்கின.  அதான் எழுப்பவில்லை.  அதோட குட்டி பாப்பா மாதிரி என் பெட்டர் ஹாஃப் அழகா தூங்கிட்டு இருந்தாளா ? அதை கலைக்க மனசுவரல. அப்படியே கொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டு கிலம்பிட்டேன். ஹே ! மகிழ் அப்போ நீ செம்ம க்யூட் ஆ இருந்த தெரியுமா? " என்றவனின் கண்கள் அந்தக் காட்சியை மறுஒளிபரப்பு செய்தது.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now