மறதி!!!
இவ்வுலகின் ஆகச்சிறந்த வரம் அதுவே.வாழ்க்கை எனும் ஆழி,அதன் எல்லை நாம் வகுத்துக் கொண்டது. ஆனால் அதன் பயணம் நீண்டது தான்.நமது வாழ்வின் அரிய பொக்கிஷம் நிம்மதி.நிம்மதி எனும் சிறு தீவினை அடைய,நமக்கு அளிக்கப்பட்ட வரம் மறதி!!! வஞ்சம்,கோபம்,நஸ்டம்,துன்பம் எனும் சுழிகளில் சிக்கிக் கொண்டு வெறும் கையில் நீச்சல் அடித்து நிம்மதியைத் தேடி அலைகிறது மனிதயினம்.
மறதி எனும் படகு நிலைகுத்திக் கரையில் கிடக்கிறது.மறதி எனும் படகினைப் பற்றிக் கொள்.உனது நிம்மதித் தீவினை விரைவில் அடைந்துவிடுவாய்.அதை விடுத்து மனிதா ! சாகசம் என்று நீச்சலடிக்காதே அது அறிவீனம் .சுழிகளில் சிக்கி உன் நிம்மதியை இழந்துவிடுவாய்.
மறத்தலும் மன்னித்தலுமே உன் வாழ்வை மகிழ்ச்சியில் கிடத்தும்,உனது நிம்மதியைக் குலைக்கும் நினைவுகள் அல்ல !!!
ஆனால் ஒன்று, மறதி!!! அது வரம் என்பதை மட்டும் என்றும் மறந்துவிடாதே!!!!
சிறு சிறு வெள்ளைப் பூக்கள் , காய்ந்த பழுப்பு நிற இலைகள் காற்றில் உதிர,அதன் இதத்தை ரசிக்காது சிமெண்ட் தரையில் இடப்பட்ட கல் இருக்கையில் அமர்ந்து,அளவுகோல் வைத்து இட்ட நேர் கோட்டினைப் போல் ஒரே இடத்தில் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்,மகிழினி.
அவளிடம் பேச வந்த யுவன் ஓசையின்றி அருகில் அமர்ந்தான்.அவனின் வரவை அவள் உணரவில்லை.இவனுக்கும் அவளது அமைதியை கலைக்கும் எண்ணம் இல்லை போலும்.அவளோ இலக்கின்றி பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கோ நீ தான் என் இலக்கு என்பதை போல மகிழினியைத் தான் பார்த்திருந்தான்.
அவர்களின் இந்த அமைதியைக் கலைத்தது அவர்களின் நண்பர்களே.ஆம்,இவர்களின் நிலையை தொலைவிலே ஓரளவு யூகித்துவிட்டவர்கள் இப்படி விட்டால் இப்போது அவன் பேசத்துவங்கமாட்டான் என்று வந்து விட்டார்கள்.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!