கெட்டி மேளம்! கெட்டி மேளம்!
"மாங்கல்யம் தந்துனானே மம
ஜீவன ஹேதுனாகண்டே பத்னாமி சுபாகே த்வம்
சஞ்சீவ சரத சதம் "சண்டைக் கோழிகளின் சமரசத்திற்கு சாட்சியாக,தங்கச்சரடு தான் அவள் கழுத்தில் ஏறியதோ அவர்கள் காதலை காட்சிபடுத்த!
உற்றார் உறவினர் சூழ காயத்ரியின் வெண்கழுத்தில் தங்கத்தாலிச் சரடினை அணிவித்தான் ராம்குமார். மெட்டி அணிவித்தல்,மாலை மாற்றுதல்,அக்னி வலம் என அடுத்தடுத்த சடங்குகள் முடிய,
தங்கள் காதல் கைகூடிய மகிழிச்சியுடன் தம்பதிகள் இருவரும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். நண்பர் பட்டாளம் பெரிய பனிக்கூழ் கட்டிகையுடன் மேடையை முற்றுகையிட்டுவிட இனி அவர்கள் ராஜ்ஜியம் தான் அங்கே. அனைத்து சடங்குகளும் முடிந்து விருந்தினர்கள் சிலர் உணவருந்தச் செல்ல சிலர் அன்பளிப்பு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.யுவனும் அறிவும் வந்தவர்களை ஒருபுறம் கவனித்துக் கொண்டிருந்தனர்.சுந்தர் ராமிற்கு துணையாக இருந்தான். இனியா மகிழினி இளங்கதிர் காயத்ரியுடன் இருந்தனர். வந்தவர்களை உணவருந்த அழைத்துச் சென்று கொண்டிருந்த யுவனின் கண்களோ மேடையிலிருந்த அவன் எதிர்காலத்தை நோக்கியே பாய்ந்துகொண்டிருந்தது.
வழக்கம் போல் அவள் அழகில் சிக்குண்ட அவன் விழிகள் அவ்விடம் விட்டு மீள மறுத்தன.
கத்தரிப்பூ வண்ண புடைவையில் செதுக்கிய சிற்பமாக அவள்!
அவளை செதுக்கிய சிற்பியை நொடிக்கொருமுறை துதிக்கும் இவன்!'பிரம்மா இப்படி ஒரு அழகியப் படைச்சு அவளோட காதல் எனக்கு கிடைக்கிற வரத்தைக் குடுத்த உனக்கு நான் என்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கேன்.தாங்க்ஸ்ப்பா'என அவன் நினைக்க
'தம்பி அதுக்கு நீ முதலில் காதல சொல்லனும்'என சரியாக அவன் மனம் மணியடித்தது.
'சரி சரி கோபப்படாத.சீக்கிரம் சொல்லி உன்னை அவள்ட்ட ஒப்படைக்கிறேன். இப்போ கொஞ்சம் அமைதியா இருவேன் ஐம் பிசி'என்று அவன் மனதை அடக்கியவன் அவள் செல்லும் இடங்களில் எல்லாம் அவன் விழிகளை சுழலவிட்டான்.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!