ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு தம்பியிடம் தன் அழைப்பேசியைக் குடுத்து ஸ்வேதாவிற்க்கு அழைக்குமாறுச் சொல்லிவிட்டு வண்டியை செலுத்தினாள்.
"ஹலோ அக்கா நான் மதி பேசுறேன். நானும் மகிழும் உங்கள பார்க்கத் தான் வருகிறோம் ம்... ஆமாக்கா ..உங்கள மகிழ் மால்க்கு வர சொன்னா . ஓ... ஹ்ம் ...சரிக்கா நாங்க வந்துடுறோம்...ம்... பாய் " பேசிவிட்டு அழைப்பை வைத்தான் மதிமாறன்.
" ஏய்.. மகிழ் ஸ்வே அக்காக்கு சிறிது வேலை உள்ளதாம்.. அதனால் நம்மல அவங்க வீட்டு பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு வர சொன்னாங்க " என்றான்
" ஹம் சரி டா. ஆமா ரிஸல்ட் வந்ததும் கோவில் போவதும் சரியாத்தான் இருக்கும் " அதை ஆமோதித்தாள் மகிழினி
இருவரும் சிற்சில வாக்குவாதங்கள் மற்றும் வம்புகளுடன் வந்து கொண்டிருந்தனர்இவர்களின் சேட்டைகளை செவியில் ஏற்றியவாரு நமது நாயகியை ரசித்தவாரு பின் தொடர்ந்தது ஒரு Royal Enfield வாகனம். இதை ஏதும் கவனிக்காமல் நமது பாசமலர்கள் பதினைந்து நிமிடத்தில் இடத்தை அடைந்தனர்.
"மதி ! நீ கீழ இறங்கி வெய்ட் பண்ணு . நா ஸ்கூட்டிய பார்க் பண்ணிட்டு வருகிறேன் " என்ற மகிழ் சென்று விட்டாள்."ஹ்ம் சரி மகிழ் நீ பார்க் பண்ணிட்டு வா " என்றவன் வாசலில் காத்திருந்தான்.
வண்டியை நிறுத்தி வந்தவள் "ஹே !என்னடா அந்த மேடம் இன்னும் வரவில்லையா ?" என்றாள் மகிழினி
" உன் ப்ரெண்டு பிறகு உன்னபோல தான் இருப்பா சரி வா நம்ம உள்ள போய் வெய்ட் பண்ணலாம் " என்றவனை நிறுத்தியவள்
" ஏய்... இருடா அவ வந்ததும் எல்லாரும் சேர்ந்து உள்ள போகலாம் " என்றாள்
" ஆமா.. இரண்டுபேரும் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் பாரு ஒன்னா தான் உள்ள வருவாங்க....வாடி கால் வழிக்குது உள்ளே சென்று உட்காரலாம்" அவளையும் சேர்த்து ஓட்டினான் மதி.
" ச்சி.. எரும பேச்சப் பாரு.. பெரியமனிதன் மாதிரி.உன்ன எத்தனை முறை சொல்வது டி போட்டு கூப்பிடாதன்னு. பொடிப்பயலே மூஞ்சிய பாரு.சரி வந்து தொல உள்ள போகலாம்" என்று மகிழ் உள்ளே செல்ல
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!