ஆறுமாதம் உடன் பழகிவிட்டு தேவைமுடிந்ததும் மறைந்துவிடுகிறார்கள். நிஜம் தானா என்றே தெரியாமல் கைப்பேசியில் காதலை வளர்க்கிறார்கள். முதலில் தம்முடன் பழகுபவர் எதிர்பாலினம் தானா என்பதே கேள்விகுறிதான். இந்த நிலையில் அது என்ன காதலோ?
ஆனால் ஒருவன் ஆண்டாண்டுகளாக நேசிக்கிறான்! தனக்கே தெரியாமல்! தன்னுடனே இருந்து கொண்டு! தன் நெருங்கிய தோழனாக இருந்தவன்! வாழ்வில் நேர்ந்த பாதி சந்தோசத்திற்கு காரணமாக இருப்பவன்! உடனே இருந்து காத்தவன்! காதலித்திருக்கிறான்! திருமணமும் செய்து கொண்டான்! இன்னும் தனக்கான இடத்தை தந்து காத்திருக்கிறான்! எல்லாம் ஃபான்டசி தான் மகிழினிக்கு. ஆனால் நிஜத்தில் அதுதான் நிகழ்ந்தது என்றால்?
அவளின் ஆராத்துயருக்கும் அவன் தான் காரணம் என்றால்?உண்மை அனைத்தும் மகிழினிக்கு தெரிந்த பின்பே தன் காதலை கூறி திருமணம் செய்து கொள்வேன் என்ற யுவனின் கூற்று நன்கு அறிந்தவள் அகிலா. ஆனால் சில பல சிக்கல்களிலும் யுவனின் உண்மையுரைக்கவியலா இயலாமையிலும் நடந்த திடீர் திருமணம் அதன் காரணம் அகிலாவிற்கு தெரியவாய்ப்பில்லை.
அவளுக்கு இருந்த வேலைப்பளுவில் என்ன நடந்தது என்று கேட்டுக்கொள்ளவும் முடியவில்லை. இவர்களுக்கு இருந்த கொண்டாட்டத்தில் தெரியாத வசமாக அகிலா உண்ணையுரைக்க வாய்பிருக்கிறது என்பதை நினையவும் முடியவில்லை . ஆனால் அது தானே நடந்தது . அது நடக்காவிட்டாலும் யுவன் என்றைக்கு தான் காதல் மொழிவானோ. அவனை படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
"அகி ஃப்ரீயா கொஞ்சம் பேசலாமா ? " கைப்பேசியை அனைத்துவிட்டு அமர்ந்தவளிடம் கேட்டாள் மகிழினி
" அட இதென்ன அண்ணி கேள்வி. நான் வீட்டுக்கு வந்துட்டாளே ஃப்ரீயா மட்டும் தான் இருப்பேன். நீங்க சொல்லுங்க " அவள் பேசப்போவதை ஆர்வமாக கேட்டாள் அகிலா
" இல்ல தீனா அண்ணாவுடன் பேசிட்டு இருக்கும்போது எதோ சொன்னியே. யுவன் அண்ணா லவ் உங்களை அப்படின்னு. என்ன சொன்ன " மகிழினி கேட்க
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!