பதிலை எதிர்ப்பார்திருந்த நண்பர்களை காக்கவைக்காமல் தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விளைந்தான்.
" என்ன டா கேட்ட அவளப் பற்றி தெரிந்துகொண்டது தானே ? அவளுக்கு குழந்தை மனது டா. நான் முதல் முறை பார்த்தப்பொழுது அந்தக் குழந்தைத் தன்மையை பார்த்துதான் லவ் பண்ண ஆரம்பித்தேன். ஃபாளோப் பண்ணேன். ஆனா அதற்குப் பிறகுதான் தெரிந்தது அவளின் குழந்தை குணத்திலும் ஒரு மெச்சூரிட்டி இருக்கு அவக்கிட்ட.
இப்போ ஒரு சிலர் அவங்க அப்பாஅம்மா தரும் பாக்கெட்மணியை ஊர் சுத்துவது ,மேக்கப்கிட் வாங்குவது , உடை இந்தமாதிரி விசயங்களுக்கு தான் பயன்படுத்திக்கிறாங்க. பட் என் மகிழ் சம்த்திங் டிஃப்ரண்ட் .அவ அப்பா தரும் பணத்தை தேவையில்லாம யூஸ் பண்ணாம அத சேமிப்பாக்கி அதில் எவ்வளவு பொருள் வாங்க முடியோமோ வாங்கி முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு செய்வா.
இந்த விஷயம் எனக்கு தெரிந்ததிலிருந்து நானும் அத செய்துவற்றேன். எவ்வளவு பணம் இருந்தாலும் நம்மால் முடிந்தத இது போல செய்வதில் இருக்க மகிழ்ச்சி வேற எதிலும் கிடைக்காது. அத எனக்கு குடுத்தது அவ தான். அவ தேவதை தான்டா " உணர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.
மகிழினி மட்டுமல்ல பெண்கள் அனைவரும் தேவதைகள் தான். பெண்கள் மட்டுமல்ல அனைவருமே அவரவர் சொந்த வாழ்வில் அவர்களது உலகத்தில் அவர்கள் நாயகர்கள் மற்றும் நாயகிகள் தான். இதை புரிந்து கொண்டாளே ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள் இருக்காது.
மேலும் தொடர்ந்தவன் "அவ ரொம்ப இன்னோசன்ட் . அவளுக்கு அம்மா அப்பா தான் எல்லாமே. அவ அண்ணா தம்பி இருவர்க் கூடவும் சண்ட இட்டு கொண்டுதான் இருப்பா . ஆனா அது ஒரு வழியான பாசத்தோட வெளிப்பாடு. விஸ்க்காம் படிக்கனும்னு ஆசப்பட்டா அவ அப்பாக்காக இப்போ மெடிக்கல் ஃபீள்டு. அடிக்கடிக் கோவம்வராது வந்தா பத்ரகாளி தான்.எந்த ஒரு சூழ்நிலையும் சிரிச்சிட்டே ஹேன்டில் பண்ணிடுவா. அப்பறம் செல்ஃப் ரெஸ்பக்ட். தென்..... etc..... etc .......என்னடா பதில் கிடைத்ததா?" எனத் தன் பக்கக் கருத்தை அவன் செல்ல நண்பர்களிடம் இருந்த கேள்வியானப் பார்வை மாறி அதில் குழப்பம் தொற்றிக்கொண்டது. அதைக் கேட்டும் விட்டனர்.
ESTÁS LEYENDO
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!