சுட்டெரிக்கும் கதிர்கள் சுருங்கி, தங்கத்துகள்களில் நிலமகள் மிளிர்ந்து கொண்டிருந்தாள். பகல் வெயிலின் தாக்கமாக, சிறு வெண்மையும் அதிக குளுமையும் கொண்ட காற்று அம்மாலை வேளையில் பரவசமாக வீசிக்கொண்டிருக்க, காலை வேலைக்காக சென்றவர்கள் தங்கள் மனை நோக்கித் திரும்பும் வேளையது.
இரை தேடி சென்ற புள்ளினங்களும் தன் கூட்டத்துடன் கூடு திரும்பிக் கொண்டிருந்தன.சன்னலின் வழி சிறு கீற்று ஊடுருவி அவளைத் தொட, அம்மாயாஜாலத்தால் மினுமினுக்கும் தன் மேனியைக் கவனிக்காது, ஈரக்கூந்தலை ட்ரையரில் உலர்த்திக் கொண்டிருந்தாள்.கண்கள் கண்ணாடியில் தன் பின்பத்தை நோக்கினாலும், எண்ணகள் என்னவோ சிறிதேனும் இங்கில்லை.
"என்னடி பலத்த யோசனை " என்றவாறு தான் கொண்டு வந்த வெள்ளரிச்சாற்றை அவள் கையில் தந்துவிட்டு, ட்ரையரை வாங்கி அவளின் கூந்தலை உலர்த்தத் துவங்கினாள்.
"இளா எனக்கு என்ன செய்வதென்றே தெரியலப்பா"என்றாள் மகிழினி.
"அப்படியேத் தலையில் ஒன்னு போட்டன்னு வை. என்னவென்று சொன்னால் தானடி தெரியும். வெறுமனே இப்படி சொன்னா நான் என்ன நினைப்பதாம்?" என்றவளின் புறம் திரும்பிய மகிழினி, அன்று பேருந்தில் விசால் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல, இளங்கதிரோ விழிகள் உருண்டு கீழே விழுந்து விடும் போல் கண்களை விரித்துக் கொண்டு கேட்டாள்.
"ஹ்ம்ம் அப்பறம், அப்பறம் நீ என்ன சொன்ன? "என்றவள் ஆர்வமாகக் கேட்க,
மகிழினி "நான் என்ன சொல்லப்போறேன். இல்ல அத்தான் இது சரிவராது. எனக்கு எப்போதும் அப்படி ஒரு நினைப்பு உங்கள் மேல் வந்ததேயில்லை.சாரி அத்தான் மறந்திடுங்கன்னு, சொல்லிட்டு வந்தேன். ஆனால் அவங்க தான் அதைக் கேட்ட பாடில்லை" என்றாள்.
இளங்கதிருக்கு அப்போது தான் மூச்சே வந்தது. எப்படியும் ஏற்கமாட்டாள் என்று தெரியும், இருந்தும் என்ன சொல்லியிருப்பாள்? என்ற நினைப்பு அவளுக்கு படபடப்பைத் தந்தது.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!