நாட்களின் நடைபயணம் தடைபாடாமல் செல்ல இதோ இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. வழக்கமாக நிற்கும் அதே இடத்தில் மகிழினியைக் காண அமலுடன் நின்றிருந்தான் யுவன். இருவரையும் உரசிக்கொண்டு ஒரு ஸ்கூட்டி வந்து நிற்க திடுக்கிட்டு இருவரும் காண சிரித்த முகமாக தனது தலைக்கவசத்தை கலட்டினாள் ஒருத்தி.
"ஹாய் மச்சான்"என்று அமலுக்கு கையசைக்க
அமல்' இவளா. யுவனுக்குத் தெரிஞ்சா ஓட்டிருவானே. ச்ச சரியான இம்ச' என நினைத்துக் கொண்டு
"ஏய் மச்சான் கிச்சான்ன கொண்டுருவேன் நீ இங்க என்ன பண்ற முதலில் இடத்த காலி பண்ணு"என்று அவளை விரட்ட
யுவன்"என்னது மச்சானா யாரு அமல் இவங்க"என்க அந்த பெண்
"அத நான் சொல்றேன் பாஸ்
நான் சங்கவி அமல் உடைய வருங்கால மனைவி. இப்போ ஒன் இயரா அவர லவ் பண்ணிட்டு இருக்கேன். நானும் அவரோட க்ளாஸ் தான். நீங்க என்ன பார்த்ததில்ல பட் எனக்கு உங்களை பற்றி நல்லா தெரியும். எனி மோர் டௌட்"என்கஅமல்"ஏய் மனைவியா அப்படியே ஓடிரு .ஓங்கிக் கொட்டுனேன்னு வை இன்னும் அரையடி குள்ளமாகிடுவ குள்ளக்கத்திரிக்கா. எத்தனை முறை சொன்னாலும் உனக்கு புரியாதா நான் லவ் எல்லாம் பண்ணமாட்டேன் . அதுவும் உன்னை பண்ணவே மாட்டேன் . எங்க அம்மா சொல்ற பொண்ண தான் நான் கட்டிப்பேன். இப்போ மரியாதையா இங்க இருந்து கிளம்பு.ச்ச உன்னத்தான்பிடிக்கலன்னு சொல்லிட்டேன்ல அப்பறம் ஏன் என்ன இப்படி டார்ச்சர் பண்ற" எனத்திட்ட
யுவன் " டேய். என்னடா இப்படி திட்டுற அதுவும் ரோட்டில் வைத்து ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பிகேவ் பண்ணும்னு தெரியாதா"என்று அவனிடம் கேட்க அமலோ சங்கவியை முறைத்துக்கொண்டு நின்றான்.
அவன் தன்னை பிடிக்கவில்லை என்று சொன்னது வருத்தமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாது"அட என்ன பாஸ் நீங்க அவரை ஏன் திட்டுறிங்க. என் மேல் உரிமையில் தான் மச்சான் கோபப்படுராரு எனக்கு ஒரு வருத்தமும் இல்ல. ஒரு உண்மை சொல்லட்டா எப்போதும் விட இன்று கொஞ்சம் குறைவுதான்" என்று சிரித்துவிட்டு
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!