❤துணைவன் 22❤

835 51 46
                                    

நிலவிடம் போட்டிப் போட்டுக் கொண்டு கதிரவன் உதிக்க அழகாய் விடிந்தது அந்தப் பொழுது.

பத்திற்கும் மேலான ஆடம்பர மகிழுந்துகள் ஒரே சீரான வேகத்தில் அடுத்து அடுத்து அந்த வண்டிகள் உள்ளே நுழைந்து சடன் ப்ரேக் இட்டு நிற்க அடுத்து ஐந்து நிமிடத்தில் வீட்டின் ஹாலில் ஒரு சபை அமைக்கப்பட்டு விட நடுவில் அமல் பரிதாபமாக அமர்ந்திருக்க அவனை சுற்றி முறைத்தவாறு சிறுவர் முதல் பெரியவர் வரை ஒரு கூட்டமே இருந்தது. சந்தேகமேயின்றி அவர்கள் யுவன் ஆதித்யாவின் குடும்பமே அதில் அமலின் குடும்பமும் அடக்கம்.

மருந்துகளின் உதவியால் ஒய்யாரமாக அறையில் உறங்கும் யுவனுக்கு மனதில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் அமல். வேலையாள் அனைவருக்கும் அவர் அவர்களுக்கு விருப்பமுடைய பானங்களை வழங்க அதை ருசித்துக் கொண்டே துவங்கியது புலன் விசாரணை.

சற்றே கடுமையான குரலில்"என்ன அமல் என்ன நடக்கிறது இங்க"என்று ஆதவன் வினவ உள்ளே சற்று உதறல் எடுத்தாலும் வெளிக்காட்டாது சமாளிக்கத் துவங்கினான்.

"ஹ்ம். சூப்பரா போது மாமா ஸ்டடீஸ் முடிந்துவிட்டது . அப்பா உடைய கம்பனி தான் பார்த்துக்கப்போறேன் மாமா.யுவன் தான் பாவம் உங்களை எல்லாம் மிஸ் பண்ணான். அவனுக்குத் தான் அடுத்த ஸ்டடீஸ் பற்றி தான் யோசிச்சுட்டு இருக்கோம். நேற்றுக்கூட அவனுக்கு ஹயர் ஸ்டடீஸ் அன்ட் ஒரு சின்ன ஜாப் அரேன்ஜ் பண்றதுக்காக தான் போய்ட்டு வரும்போது ஒரு சுமோகாரன் மோதிட்டு நிக்காம ஓடிட்டான் மாமா.அவனைக் கம்ப்ளைன்ட் பண்ணனும்"என்று புதிதாக ஒரு கதையை அளந்துவிட்டு அதை நம்பினார்களா என்று உறுதிபடுத்த சுற்றிப் பார்க்க அவனது கற்பனைத் திறன் அனைத்தும் வீணாகிவிட்டது என்று புரிந்து விட்டது. வீட்டின் நண்டுசிண்டு வரை அவனை எரித்துக் கொண்டிருந்தார்கள்.

"தீனா"என்று அழைத்து அவனிடம் கண்ணைக் காட்டினார் ஆதவன்.அவருக்குத் தலையசைத்து விட்டு அமலிடம்

"தம்பி இந்த விசயம் முன்னாடியே ஐயாவுக்கு தெரியும் உங்களுக்கு தெரியாமா எங்க ஆளுங்க உங்களை ஃபாளோ பண்றாங்க. அவங்க சொல்லி தான் விபத்து நடந்தது எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரிந்ததை மறைக்காம சொல்லிடுங்க தம்பி"என அவனுக்கே உரிய கரகரத் தொண்டையில் கூற அமலுக்கோ அச்சத்துடன் சேர்த்து ஆச்சரியம் வேறு.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now