❤துணைவன் 9❤

1.1K 59 43
                                    

கல்லூரி துவங்கி வாரங்கள் கடந்திட வகுப்பிற்கு ரெப்ரசன்டேடிவ் தேர்வு செய்ய முடிவெடுத்தனர். அதற்கான தேர்வில் ஈடுபட்டிருந்தார் மஞ்சு.

" ஹலோ கய்ஸ் அட் லாஸ்ட் ஐ ஃபவ்ன்ட அவர் ஃபர்ஸ்ட் மன்த் ரெப்ரசன்டேடிவ்"  என்றுக் கூறி  ஆண்கள் பிரிவில் இருந்து ராமையும் பெண்கள் பிரிவில் இருந்து ஐஸ்வர்யா என்ற கேரளப் பெண் ஒருத்தியையும் தேர்வு செய்தார்.

வகுப்பில் அதிகம் சேட்டை செய்யும் ராமை தேர்வு செய்ததில் அனைவரும் சிரித்து விட்டனர். அந்த சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவரோ அதற்கு விடையளித்தார் .

"எல்லாரும் ஏன் சிரிக்கிறிங்கன்னு புரியுது.  திருடன் கையிலே சாவியான்னு கேட்க்குறீங்க.  இப்போ அதிகமா சேட்டை செய்யும் ராம் கிட்ட பொறுப்பு இருந்தா அவன் சேட்டை எல்லாம் மூட்டைக்கட்டிடு அவனோட கடமைய சரியா செய்வான். அவன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு.
என்ன ராம் கரக்ட் தான நான் சொல்றது " என்று சிரிப்புடனே கூறிமுடித்தார்..

அதற்கு ராமோ அவனிடம் இருக்கும் குறுநகை மாறாமல்,  "நீங்க சொன்னா சரிதான் மேம் "என்க, 

மஞ்சுவோ " ஹே அதற்காக ரொம்ப நல்லவனா மாறிடாத ராம் அப்பறம் க்ளாஸ் ரொம்ப போரிங்கா இருக்கும் " என்று கூறி விட்டு இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு சென்றார்.

ரெப்ரசன்டேடிவ் இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ள அதைக் கண்டு இருவிழிகள் சிவந்தன கோவத்தில். கண்கள் மட்டுமா கோவத்தை காட்டியது வழமை போல் வார்த்தைகளை வருத்தெடுக்கத் துவங்கினாள் காயத்ரி 

அவளின் முறைப்பைக் கண்டுகொண்ட ராமோ சுவியிடமும் யுவியிடமும் புலம்பினான்
" டேய் மாப்பிள என்னடா அந்த காயு எப்பப்பாத்தாலும் என்ன திட்டீட்டே மொறச்சிக்கிட்டேத்  திரியுறா . உங்கக்கிட்டலான் நல்லாதானப் பேசுறா. நான் என்னடா தப்புப்பன்னேன் தெரியாம இடித்தது ஒருக் குத்தமாடா"என்க

யுவியோ " நீ ஏன் ராம் அவங்களப் பார்க்கிற அவங்க உன்ன மொறைக்கிறது உனக்கு எப்படித் தெரியும்"என்று நக்கலாக வினவ

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now