குழந்தைகளின் குணாதிசயங்களை வியந்து இரு நண்பர்களும் பேசிக் கொண்டிருக்க அந்த அறைக்குள் ஜோடியாக நுழைந்தனர் யுவன் ஆதித்யாவின் பெரியப்பாவின் மகள் மற்றும் மருமகன்.
"அக்கா மாமா வாங்க"என்று வரவேற்று அமரவைத்தவன்
"அம்மாச்சி தாத்தா பாட்டி தாத்தா பெரியம்மா பெரியப்பா எல்லாரும் ஏன்க்கா வரல"என்று அவன் கேட்க
அவர்கள் முக்கியமான ஒரு விசேடத்திற்கு இரு நாட்கள் முன்பே சென்று விட்டார்கள் என்றவள் அவர்கள் வந்த விசயத்தைக் கூற அமலோ'அடப்பாவிகளா'என்றவாறு அவர்களை விழித்துப்பார்த்தான்.
குழந்தைகள் எதற்காக வந்தார்களோ அதேக் காரணத்தைக் கூறி மகிழினியின் புகைப்படத்தைப் பார்த்து புகழ்ந்துவிட்டுப்போக ஆதவன் சரண்யா தம்பதியரை தவிர்த்து அனைவரும் ஒருவர் அறியாது ஒருவர் வந்து அதே வேலையைச் செய்தனர்.இதில் அமல் தாய் தந்தையர் விதிவிலக்கா என்ன?.அமல் தான் ஒருவன் இங்கு இருக்கிறேன் என்று தெரியாத அளவிற்கு செதுக்கிய சிலையாக ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தான்.
---------------------------------------------
சில்லென்றக் காற்று மேனி வருட அணையினை உடைத்தெரிய அரும்பாடுபட்டு அதை இருபுறமும் மோதிச்சென்றன அலைகள்.அந்த அணையின் பாலத்தில் ஒரு Royal Enfield அந்த ரம்மியத்தை ரசித்துக் கொண்டு வண்டிக்கும் நோகாமல் சாலைக்கும் நோகாமல் மெதுவாக சென்றது.
பாலருவியும் தேனருவியும்
ஐந்தருவியும் உன் நேசத்தின் முன்னே
முன்னே தோத்தே போகும்
மண்ணிலே சொர்கமிது.
ஏய்யா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீ தான் என் சோட்டுக்காரா.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!