❤துணைவன் 10❤

1.1K 59 38
                                    

அனாட்டமி லேப்..

" ஓகே  ஸ்டூடன்ஸ் இப்போ நம்ம மசில் அனாட்டமி தான் பார்க்கப்போறோம் அன்ட் வித் கடாவர் (dead body).க்ளாஸ் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி நீங்க எல்லாரும் ஒரு விசத்தை புரிஞ்சுக்கனும்

சிலர்க்கு கடாவர் பார்த்ததும் பயம் இருக்கும்,  சிலர் அருவருப்பு அடைவீங்க . பட் எல்லாரும் தெரித்துகொள்ள வேண்டியது அவங்களும் நம்மல போல மனிதர்களா இருந்தவங்கதான். இன்னும் சொல்லப்போனா நீங்கல்லாம் படிக்கிறதுக்காக அவங்க உடல டொனேட்ப் பண்ணிருக்காங்க . சோ நம்மல விட அவங்க தான் க்ரேட் புரியும்ன்னு நினைக்கிறேன்.

அவர்களுக்காக நீங்க ஃபீள் பண்ணாலாம் இல்ல பெருமையா நினைக்கலாம் .இட்ஸ் அப்பான் யூ. பட் உள்ள வந்ததும் கடாவர் பார்த்து முகம் சுளிக்காதிங்க.

.இது நாங்க எல்லா ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ஸ்க்கும் குடுக்கிற காமன் அட்வைஸ் தான்.  சோ டோன் வௌரி and you all gonna divided into a three batches, the name list will be given by your representatives . after five minutes first batch should be in a cadaver room sharply" என்று கோர்வையாகப் பேசிவிட்டு சென்றார் டாக்டர். மஞ்சு ப்ரியா. 

மாணவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்து அனைவரும் மாஸ்க் மற்றும் க்ளௌஸ் அணிந்து கொண்டனர். முதல் பிரிவினர் அறைக்குள் சென்றனர்.

லக்சரர் கடாவர் அருகில் நிற்க மாணவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

அனைவரின் முகத்திலும் ஒருவிதமான உணர்வு இருந்தது .ஆனால் அவர்களின் லக்ச்சரர் சொன்னது போல் யாரும் முகம் சுளிக்கவில்லை.

அந்த முதல் பிரிவில் தான் இருந்தாள் மகிழினி .அதைக் கண்டதும் மகிழின் நீரத்திரையிடத் துவங்கியது. அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டிருந்தாள் மகிழ்.

இது அவன் கண்ணிலிருந்து தப்பினால் தான் அதிசயம் .ஆம் மகிழினியை காணாது அவன் எப்படி இருப்பான்.  அவனும் அதே கல்லூரி அதே வகுப்பில் தான் இருந்தான். அவளின் குழந்தை தனத்தை ரசித்துக் கொண்டு மனதில் சிரித்துக் கொண்டாலும் அவளின் கண்ணீரைத் துடைக்கத் துடிக்கும் கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு ஆசிரியர் நடத்துவதையும் கவனித்துக் கொண்டிருந்தான் .

தோழனே துணையானவன் (completed) Donde viven las historias. Descúbrelo ahora