❤துணைவன் 38❤

781 49 74
                                    

" இது தப்பு யுவி "

"எது தப்பு மகிழ் "

"ப்ச்!! விளையாடாதே யுவி "

"லுக் மகிழ் ஐம் சீரியஸ் "

அதே இடம்!
பல நாட்கள் மகிழுடன் கொண்டாட்டமாக சுற்றுவதாக அவன் கற்பனை செய்த அந்த பாலம் தான். ஆனால் இன்று நிலை கொண்டாட்டம் இல்லை வாதம் நடந்து கொண்டிருந்தது .

" ஒரு கட்டாயத்திற்காக எந்தக் கல்யாணமும் நடக்கக்கூடாது யுவி. உனக்கு ஏன் புரியவில்லை? " என்றாள் மகிழ்.

" இப்போது என்ன கட்டாயம் இங்க இருக்குன்னு நினைக்கிற நீ " அனையை ஒட்டி தழும்பும் நீரினைப் பார்த்தவாறு சொன்னான் யுவன் ஆதித்யா.

" அந்த விசால் கிட்ட இருந்து என்னைக் காப்பாற்ற தானே என்னை கல்யாணம் செய்துக்கனும்னு சொல்ற " வேதனையாக கேட்டாள்.

அவள் சொன்னது தான் தாமதம், விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கிவிட்டான். மகிழினி அவன் சிரிப்பதை குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்க அவ்விடத்தில் அவன் சிரிப்பு மட்டுமே அலைகளுடன் உரசி எதிரொலித்தது.

பொறுமையிழந்தவள் " டோன் பீ சில்லி யுவி! இப்போ ஏன் சிரிக்கிற? எனக்கு இரிடேட் ஆகுது " என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

மெதுவாக சிரிப்பதைக் கட்டுக்குள் கொண்டுவந்தவன் " ஹாஹா!!! ஏன் டி உன் மூளை இவ்வளவு மொக்கையாக காரணம் தேடுது . பின்ன என்ன அவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவனிடம் இருந்து உன்னை காப்பாத்த இந்தக் கல்யாணமா? ஹாஹா குட் ஜோக் " என்றான்.

ஆம் உண்மை தானே!! யுவனுக்கு விசால் ஒரு பொருட்டே கிடையாதே! எப்படி மகிழிடம் பேசுவது என்று தவித்திருந்தவனுக்கு இந்த சூழல் சரியாக அமைய அதைப் பயன்படுத்திக் கொண்டான். உண்மையை சொல்லவேண்டுமானால் அவனுக்கு பயம் !!!
காதல் சொன்னால் நடந்த அனைத்தையும் சொல்ல வேண்டும். பின்னர் அவள் அவனை பிரிந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்!

அவனுக்குத் தெரியும் மகிழினி இதை தான் காரணமாக இந்தத் திருமணத்திற்கு நினைப்பாள் என்று. அவனுக்கு எப்படியாவது அவளை இதற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும்!!!

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now