❤துணைவன் 44❤

655 40 50
                                    

காதல் வழியைத் தருமென சொன்னவனை கண்டால் கையெடுத்து வணங்க வேண்டுமோ! அவளிடம் காதலை மறைத்து கல்யாணம் செய்ததை தவிர வேறு என்ன தவறு செய்தான் அவன். போரிலும் காதலிலும் அனைத்தும் நியாயம் தானே. அவளின் மேலுள்ள காதலால் தானே அவளிடம் மறைக்கவும் செய்தான்.

அவன் தந்தையின் வெட்டி கௌரவத்திற்கும் அவளுக்கு தன் குடும்பத்தின் மேலுள்ள பாசத்திற்கும் இடையே இவனின் பாவப்பட்ட காதல் என்ன செய்தது . எளிதில் விலகி சென்றுவிட்டாளே! சிறிதளவேனும் அவனது தூய அன்பு அவளுக்கு புரியவில்லையா? ஏன்டா இப்படி செய்தாய் என்று கேட்க கூட அவள் இப்போது அவனருகில் இல்லை!

மௌனமாக மருகியது யுவனின் மனம்! 'அப்போ அவளுக்கு நான் முக்கியமில்லையா? என் காதல் புரியவில்லையா? நான் அவள் கணவன் என்ற நினைப்பு துளியேனும் அவளுக்கு இருக்கவில்லையா? ' மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டாளும் ' அதுதான் சென்றுவிட்டாளே! இருந்திருந்தாள் சென்றிருப்பாளா? ' என்றது ஒரு மனம்

' சுயநலமாக யோசிக்காதே! நீ செய்யவில்லை என்றாளும் உன்னால் தான் அவள் தன் குடும்பத்தை இழந்தாள். இதை நீ எதிர்பார்த்ததால் தானே மறைத்தாய் . அவளின் இழப்பிற்கு முன், சொல்லப்படாத உன் காதலுக்கு ஆயுள் என்ன எதிர்பார்க்கிறாய் ' என்றது மற்றொரு மனம்.

ஆனால் அவன் மேலும் அவன் குடும்பத்தின் மேலும் இருந்த நம்பிக்கையும் , தன் கணவன் மேல் அவளுக்கு புதிதாய் பூத்த நேசமும் கலைந்துவிட்ட நொடி பெண்ணவள் மனம் சிதைந்ததை தாளாமல் தானே சென்றாள். அவன் காதல் அவளுக்கு தந்த ஏமாற்றத்தின் வலியை தாங்கவியலாமல் தானே சென்றாள். அவன் காதல் புரிந்து தானே அவ்விடம் விட்டு சென்றாள். அந்த காதல் தானே அவன் குடும்பத்தையும் பிரித்தது . இரண்டையும் எவ்வாறு அவளால் பிரித்து பார்க்க முடியும். பிறர் எடுத்துச்சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவன் இருக்கிறானா என்பதுதான் தெரியவில்லையே!

ஆகமொத்தம் சொல்லாமுடியா வார்த்தைகள் எழமுடியா காதல் வழிகள் அவனை வட்டமடித்து வாட்டிக் கொண்டிருந்தன.

தோழனே துணையானவன் (completed) Où les histoires vivent. Découvrez maintenant