❤துணைவன் 14❤

912 60 55
                                    

உண்மை சொல்லாமல் அழைத்துச் செல்லலாம் என அங்கே வந்தவனோ தங்கையைக் கண்டதும் மனம் தாங்காமல் அனைத்தையும் சொல்லிவிட!!!!

மல்லிகை கொடியாய் மயங்கி விழுந்த மங்கையை அவள் தமையன் தாங்கிப் பிடிக்க., அவளின் அரவம் கேட்டு அங்கு மீதமிருந்தவர்கள் கூடிட, மஞ்சு அவளருகே வந்து எழுப்பிவிட்டார் .மகிழினியின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவள் கன்னத்தில் தட்டி எழுப்பினார்" மகிழ் இங்க பாரு ஒன்னும் இல்ல.இங்க பாரு " அங்கே கூடியிருந்தவர்களிடம்

" கொஞ்சம் எல்லாரும் விலகிஇருங்க . அவளுக்கு ஃப்ரஸ் ஏர் விடுங்க.ஷீ வில் ஃபீல் பெட்டர் " என்க , அங்கிருந்தவர்கள் அவர் சொல்படி அவளுக்கு இடைவெளிவிட்டனர்.  அனைவர் முகத்திலும் பதற்றம் அப்பட்டமாக தெரிந்தது . என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து நின்றனர் .

மஞ்சு அவளை மெதுவாக மயக்கதிலிருந்து மீட்க, விழித்தவள் கண்டது தன்னை மடியில் தாங்கி இருக்கும் தமையனின் கலங்கிய முகம். அவனை கண்டதும் அவன் கூறிய வார்த்தைகள் நினைவு வர பெருக்கெடுத்தது விழி நீர்.

" அண்...அண்ணா. ப் ப் பொ.. பொய்  சொல்லாத.. அண்ணா  அவங்க எ.. என்ன மாட்டாங்க இல்ல ..நீ உனக்கு இல்ல ண்ணா நான் நம்பமாட்டேன் " என திக்கித்தினறி விசும்பலுடன் கூறி விட்டு அழுகையை தொடர்ந்தாள் அவனின் பதிலை எதிர்ப்பார்த்து .

அதற்குள் அங்கிருந்த பிற மாணவர்களை மஞ்சு நகர்த்திவிட அங்கே எஞ்சியிருந்தவர்கள் மகிழினியின் நெருங்கிய நட்பு வட்டாரமான ராம் யுவன் இனியா இளங்கதிர் காயத்ரி சுந்தர் ரவி மற்றும் விசால் அவர்களுடன் கல்லூரி தலைமை ஆசிரியர் மற்றும் மஞ்சு மட்டுமே .  அவளின் கேள்விக்கு பதில் வராதிருக்க  அழுதபடி இருக்கும் அறிவிடம்  விசால்  " மச்சான் என்ன தான் ஆச்சு.. சொல்லுங்க.. ஏன் அழறீங்க?"  என்று கேட்க அறிவு  தரையை நோக்கிக் சொல்லத்துவங்கினான்.

" விசு  சித்தப்பா சித்தி மதி மூன்னு பேரும் நேற்று குலதெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தாங்க . இன்று திரும்பி வரும் போது. " என்று விசும்பலுடன் எச்சிலைக் கூட்டி விழுங்க

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now