" நீங்க இந்த வாரம் முடிஞ்சா வீட்டுக்கு டின்னர்க்கு வாங்களேன். என் பொண்ணு வொய்ஃப் எல்லாம் கூட உங்கள மீட் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாங்க. பொண்ணு இப்போ தான் ட்ரைனி டாக்டர் ஆ வொர்க் பண்ணிட்டு இருக்கா. வெரி டாலன்டட் கேர்ள் " என்ற அந்த ஆண் மருத்துவரிடம் எதோ சொல்ல அவன் வாய் திறக்க
அதற்கு முன் " லாஸ்ட் வீக்கே அவரை நான் லஞ்ச்க்கு இன்வெய்ட் பண்ணேன் டாக்டர். அதற்கே இன்னும் அவர் வரவில்லை . எங்க வீட்டில் கூட இவரை பார்க்கனும்னு சொல்றாங்க " என்றவாறு வந்தமர்ந்தார் அந்த பெண் மருத்துவர்
அவர்களின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் 'ஆஹா!!! பூனையை பிடிக்க சென்று புலிக்கிட்ட மாட்டின கதையால இருக்கு. எப்படி சமாளிப்பேன் ? பரவாயில்ல டா விசால் நீயும் டிமான்டபிள் ஃபிகர் ஆ தான் இருக்க. அழகன் டா நீ ' என்று தன்னையே ரசித்துக் கொண்டவன்
" அ.. அதெல்லாம் அப்பறம் பார்க்கலாம் டாக்டர்ஸ் இப்போ பட்டுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணனுமே. இங்க உங்க சீஃப் நர்ஸ் இருப்பாங்களே ஜெஸ்ஸியோ மெஸ்ஸியோ அவங்கள வர சொன்னிங்கன்னா போய் பாண்டெய்ட் போடலாம் " என்றான் ஆரித்ஜென்ஸியை கருத்தில் கொள்ளாதவன் போன்று .
வாரம் இருமுறையேனும் அந்த அரசு மருத்துவமனைக்கு வந்துவிடுவான். அப்போது தான் அங்கே பணிபுரியும் மருத்துவருக்கும் இவனுக்கும் பொதுவான ஒருவரின் பேரில் நட்பு ஏற்பட அவனது அட்டகாசங்களை பொறுக்க முடியாது ஆரித்ஜென்ஸி தான் தலைவழி மாத்திரை எடுக்கும் படி ஆனது.
இன்று அவனது நாய்க்குட்டியைத் தூங்கிக்கொண்டு வந்துவிட்டான். தான் ஒரு காமடியனைப் போல் இப்படி சுற்றுவோம் என்று கனவிலும் அவன் நினைத்திருக்க மாட்டான். ஆனால் இன்று சுற்றுகிறான். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். விசாலின் அட்டகாசத்தில் ஆரித்தின் மனம் கரையுமா?!
அந்த மருத்துவர் அழைத்ததும் உள்ளே வந்த ஆரித்ஜென்ஸி விசாலை ஆயாசமாகப் பார்த்தாள்.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!