❤துணைவன் 41❤

651 39 77
                                    

நெடுந்தொலைவு பயணத்தின்போது இரவெல்லாம் பேச்சுத்துணையாக வந்த ஒரு சகபயணாளி விடைபெறும் போது மனதில் சிறு வலி ஏற்படும். இந்த உலகத்தை கட்டமைத்த அன்புடைமையின் வெளிப்பாடாக அமைகிறது அந்த வலி. உருகி உருகி காதலிக்கவில்லை என்றாலும், வெகு தொலைவு வெளிநாட்டு வாழ்க்கையில் சில ஆண்டுகள் கழிந்திருந்தாளும் , பெர்ஃபெக்ட் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் ஆக முயற்சிக்கவில்லை என்றாலும் திருமணத்திற்கு பின்பான அவனின் முதல் பிரிவு!  சில நாட்களேயானாலும் அவளுக்கு அது வலித்தது என்பதை மறுக்கமுடியாது.

" ப்ச் போ! நான் பசிச்சா சாப்பிடுவேன். நீ எப்ப வருவ அதை சொல்லு யுவி. இங்க நீயில்லாம எனக்கு போர் அடிக்குது " சிறு சிணுங்களுடன் முடித்தாள்.

அழைப்பேசிக்கு அப்பக்கம் இருந்தவனோ ஆகாயத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான்.
அவன் தோழி தன் நட்பை தேடுகிறாள் !
அவன் காதலி தன் காதலை(காதலை காட்டுபவனை) தேடுகிறாள் !
அவன் மனைவி தன் கணவனை தேடுகிறாள் !
ஆகமொத்தம் ,
அவள் அவனை தேடுகிறாள்!
அது தான் விசயம் .

"Dreamz medical association camp " இரு தினங்களுக்கு முன் தான் சென்றிருந்தான். இரு நாட்களாக இது தான் நிலை.  ஐந்து ஆறு முறைக்கு மேல் அவனுக்கு அழைத்து "நீ இல்லாம இங்க போர் அடிக்கிது டா " என்கவில்லை என்றால் அவளுக்கு சோறு இறங்காது. குக்கிராமமாக வசிக்கும் அவர்கள் குடும்பத்தில் போர் அடிக்கிது என்று இவள் கூறும்போது அவனுக்கு நகைப்பு தான் வந்தது.  இருந்தும் அதில் அவன் கர்வம் அடைந்து கொள்ள தவறவில்லை.

அவன் அங்கிருந்து கிளம்புகையில், ஓயினிற்குள் மிதக்கும் கருந்திராட்சை போல் சிவந்த கண்களில் கண்ணீரை கீழே விடாது அடக்கும் முயற்சியில் கருவிழியை சுழற்றியவாறு விடைகொடுத்தவள் இந்நொடி முதல் அவன் மனக்கண்ணில் இருந்து விழகவில்லை.

இதுவரை அவர்கள் பிரிந்ததேயில்லை என்று சொல்லமுடியாதே! அவனுக்கும் அவளை நேரில் காண அவா தான். கடமை முக்கியமல்லவா!

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now