❤துணைவன் 7❤

1.2K 62 26
                                    


  " ஹா.. ஹா... ஹா...  " என்று  மகிழை  பார்த்து சிரித்தபடி இளங்கதிர் வர பொய்க்கோபத்துடன் அவளை பார்த்துக்கொண்டு  வந்தாள் மகிழினி

" ஹே..மகிழ் நர்வஸ் ஆகாதடா ப்ரஸ்டே தான இதுக்குப்போய் பதட்டபட்ற " என்று மகிழுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டும் அவளின் முகத்தில் இருந்த பயத்தை பார்த்து சிரித்துக் கொண்டும்  இருவருமாக கல்லூரி வந்து சேர்நதனர்.

அவர்கள் விடுதிக்கும்  கல்லூரிக்கும் ஐந்து நிமிட தூரம் என்பதால் இருவரும் நடந்ததுதான் வந்தனர் .

மகிழ் எதிர்பார்த்தது போல்  ராகிங் எதுவும் நடக்கவில்லை என்ற நிம்மதியோடு இளங்கதிருடன் சேர்ந்து வகுப்பிற்கு சென்றாள்.

அங்கே ஒரு சிலர் மட்டுமே இருக்க அவர்களிடம் தோழமையான புன்னகை சிந்திவிட்டு இருவரும் சென்று முதல் வரிசையில் அமர்ந்தனர் .

இளங்கதிர் அமைதியாக இருக்க அதனை புரிந்து கொண்டு மகிழினி கேட்டாள் "ஏன் இளா நல்லாதான பேசிட்டு இருந்த இங்க வந்ததும் ஏன் அமைதி ஆகிட்ட" என்றதும்

" இல்ல மகிமா நான் வீட்டில் கேசுவலாதான் இருப்பேன்.. வெளியில் யார்க்கிட்டையும் அதிகமா பேசமாட்டேன் டா  " என்று கூறிவிட்டு மீண்டும் மௌனத்தை அணிந்து கொண்டாள்

அதற்கான காரணம் கேட்க மனம் நினைத்தாலும் அதை கேட்காமல் தன்னிடம் இயல்பாக பழகுபவளிடம் தனக்கான இடத்தை புரிந்து கொண்ட மன நிறைவில் மகிழினியும் அமைதியானாள்.

இவர்களின் அமைதியை குலைத்தது மெல்லென இடைவெளி விட்டு கேட்டக் கொழுசொலியும் இடைவிடாதுக் கேட்ட சிரிப்பொலியும். முதல் இருக்கையில்  கதவருகே இருந்த இருவரும் சத்தம் வந்த திசையை நோக்க அங்கே  சிரிப்புடன் யாருக்கோ விடைகொடுத்த இனியாவை  தான் .

உள்ளே வந்தவள்  முதலில் இருந்த இருவரிடமும் தன்னை அறிமுகப்படுத்த விரைந்தாள்.

" ஹாய் ஹாய்..பட்டீஸ் அம்  இனியா" என்று சற்றும் குறையாத நகையுடன் கையை நீட்டானாள். அவளின் அழைப்பில் சற்று வியந்து பார்த்தவர்கள்  அவளுடன்  தங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

தோழனே துணையானவன் (completed) Onde histórias criam vida. Descubra agora