அவள் அந்த பொம்மையின் மேல் விட்டுச்சென்ற ஏக்கப் பார்வை தன்னையே ஏக்கமாகப் பார்ப்பது போல் உணர்ந்தான் யுவன் ஆதித்யா. ஆனால் அந்த பொம்மையோ கண்ணாடி பெட்டியில் கெத்தாக இருந்தது.
அக்கடை நோக்கி யுவன் செல்ல பின்னிருந்து யாரோ அவன் தோளைத் தொட திரும்பியவன் அமலைக் கண்டு முறுவலித்தான் .
" என்ன மச்சி இங்க நிக்கிற " என்றவாறு சுற்றித் தேட
" என்னடா தேடுற" என்றான் யுவன்
" இல்லடா நீ இங்க நிக்கிற மகிழினி எங்க என்று பார்த்தேன் "என்க
" இல்லடா அவ ஒரு பொம்மை வாங்க போனா காசில்லாம வாங்கலடா . அதுதான்டா நான் வாங்கி வச்சுட்டு ஒரு நாள் தரலாம்ன்னு இருக்கேன். அவ அந்த பொம்மைய ஏக்கமா பார்த்தா மச்சான் அந்த பார்வை நீ என்னுடன் வந்திடுன்னு சொல்லுச்சுடா.அப்படியே என்னயேக் கூப்பிட்ட மாதிரி இருந்தது " என்று பாவமாக சொல்ல
அமல் " இருக்கும்டா இருக்கும்.. அந்த பொண்ணு உன்னைக் கூப்பிடாது டா. வேணும் என்றால் அடிச்சு விரட்டும். எல்லாம் சரிதான்டா நீ லவ் சொல்லும் போது வீட்டில் சொல்லும் பையன தான் கல்யாணம் பண்ணிபேன்னு சொன்னால் கூட நீ அவங்க வீட்டில் பேசிடுவ. ஒரு வேலை வேற ஓரு பையன லவ் பண்றேன்னு சொல்லிட்டா உன் நிலை என்னடா " என்றான் அவனை கடுப்பேத்தும்
" டேய் .உனக்கு கருநாக்கு எதுவும் இல்லை இல்ல. நீ கேட்ட மாதிரி எதாவது நடந்தது உன் நாக்கத் துண்டு துண்டா வெட்டி எங்க வீட்டில் இருக்கும் மீன் குட்டிகளுக்கு சாப்பாடு போட்டுருவேன். மூடிட்டு வா "என்றவாறு அந்தக் கடைக்குள் நுழைய அமலோ 'கப்சுப் " என்று அவன் பின்னே சென்றான்.
அந்த பொம்மையைக் கையில் எடுத்தவன் "உன்ன மாதிரி தான் அந்த கொரியன் குரங்குகள் இருக்குமா. நீ ஒன்னும் அவ்வளவு அழகுலான் இல்ல . என் மகிழுக்கு உன்ன பிடித்ததால சும்மா விடுறேன். இந்த நாள் காலண்டரில் குறித்து வைத்துக் கொள் உன்னை விட நான் தான் அழகு என்று மகிழினியை சொல்ல வைக்கல நான் யுவன் ஆதித்யதேவ் இல்ல.. It's a challenge" என்று அவன் வயித்தெரிச்சலை அந்த வாயில்லா பொம்மையிடம் காட்டிவிட்டு அதை வாங்கிக் கொண்டு செல்ல அவனை " பைத்தியமா இவன் " என்பது போல் பார்த்துக் கொண்டு பின்னே வந்தான் அமல். எங்கே வாயைத் திறந்தால் தான் நாக்குத் துண்டாகிவிடுமே.
BẠN ĐANG ĐỌC
தோழனே துணையானவன் (completed)
Lãng mạnஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!