❤துணைவன் 28❤

887 42 167
                                    

கோபம் ...
எதிரில் இருப்பவர் யார்?, எந்த இடம்?,நமது வார்த்தைகள் கேட்ப்பவரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என எதையும் யோசிக்கவிடாமல் வார்த்தைக் கனைகளினால் வார்த்தொடுக்கத் தூண்டும் உணர்வு சில நேரத்தில். சில நேரங்களில் அடிதடியிலும் கொண்டு முடிக்கும்.

அதுவும்  பிடித்தமானவர்கள்  நமக்குப் பிடிக்காதவற்றையோ,அறியாத் தவறுகளையோ செய்ய நேர்ந்தால் எங்கிருந்து தான் வருமெனத் தெரியாது அந்தக் கோபம். அவரின் காரணங்கள் கேட்க்கக் கூட தோனாது நமது சொல் அம்புகளை செலுத்திவிடுவோம். அதை உரிமையென சொல்வதா? நம்பியவரிடத்தில் கண்ட ஏமாற்றத்தின் பிரதிபளிப்பு என்பதா? கோபத்தின் காரணம் எதுவானாலும்,,,

அதன் விளைவு......
உணர்வுகளால் பிணைக்கப்பட்ட உறவுகளிடத்தில் அந்த சொல் அம்பு ஏற்படுத்தியக் காயம் இன்னும் சற்று ஆழமானதே!!!

அங்கே அழுது கொண்டிருந்த சங்கவியை அறைக்கு அழைத்து வந்த வைதேகி,அவளை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சைட் விசிட்டிங் சென்ற அமல்  வந்துவிட அவனிடம் விசாரணை துவங்கப்பட்டது.

"அம்மா.சாரி மா.. "என்று அமல் இழுக்க எரிச்சல் அடைந்தவர்

"இப்போ நீ சொல்லப்போகிறாயா? இல்லையா?" என்று அவர் சற்று உரக்கக் கேட்க அதற்கு மேல்  வாய்த்திறவாமல் இருந்தால் அவன் அம்மாப்பிள்ளை இல்லையே!!!

அலுவலகத்தில் இடைவெளி நேரம்,அனைவரும் அந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்த சென்றுவிட அமல் அவன் அறையில் ஒரு கோப்பினைப் புரட்டிக்கொண்டிருந்தான். ரிசப்சனிஸ்ட் மெட்டிரியல்ஸ் மேனேஜர் வந்திருப்பதாகக் கூற அவரை அறைக்கு வரச்சொன்னான். அவரும் அவன் அனுமதியுடன் வணக்கம் வைத்து இருக்கையில் அமர்ந்தார்.

"வாங்க ராஜேஷ் சார். வேலை எப்படி நடக்குது. நம்ம நியூ ப்ராஜெக்ட் எப்படி இருக்கு. தினமும் மெட்டிரியல்ஸ் ஸ்டாக் லிஸ்ட் எல்லாம் எடுக்குறிங்களா "என கேட்டுக்கொண்டே அவர் தந்த கோப்பினைத் திறந்து வாசிக்கப் போக

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now