❤துணைவன் 35❤

988 45 78
                                    

திருமணம்!

இருமனங்கள் மட்டுமின்றி இருக்குடும்பங்கள், இருவம்சங்கள், இருவேறு சொந்தங்கள், இருவேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தும் மஞ்சள் கயிற்றில் பாலம் கொண்டு இணைக்கப்படும் பெரும் பந்தம்!

போட்டோ ஷூட் முடிந்து வந்தவள் தயங்கியவாறு அவ்வறையின் வாசலருகே நின்றிருந்தாள் . முன்னரே உள்ளே சென்றவன் திரும்பி பார்த்தான்.

"என்ன  அங்கே நின்னுட்ட உள்ள வா " என்றதும் நிமிராது உள்ளே சென்றாள்.

அவளது ஊசலாடும் விழிகளைப் பார்த்து ரசித்தவன், "  அந்த பேக்கில் ட்ரெஸ் வச்சிருக்கதா அம்மா சொன்னாங்க. நீ ஃப்ரஸ் அப் ஆய்ட்டு வா " என்றவனிடம் தலையசைத்துவிட்டு அவள் சென்று விட,  இவனும் தனக்கான உடைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

திருமணம் முடிந்த பிறகு ஸைட் போட்டோ ஷூட் முடிந்து புதுமணத்தம்பதியரை அலங்கரிக்கப்பட்ட அந்த கெஸ்ட் ஹவுஸிற்கு, ஆசிர்வதித்து அனுப்பிவிட்டு பெரியவர்கள் சென்றுவிட்டனர்.

இருவரும் உடைமாற்றி வர, அவன் உறங்கச் செல்ல , அங்கே  படபடப்பில் நின்றிந்தவளைப் பார்த்தான் . நிலையில்லாது  சுழலும் கருவிழிகள், அவ்வப்போது நிமிர்ந்து நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கொள்ள, பற்றுகோலாக இரு கை விரல்களும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி பற்றிக் கொள்ள, முகத்தில் சிறு செம்மையுடன் நின்றாள் . அவளை அவன் ரசிக்க, இணையாக அவள் நிலைகண்டு சிரிப்பும் வந்தது .

அவளை நெருங்கியன் சிரிப்பை அடக்கிக் கொண்டு " இனிமேல் வாழ்க்கை முழுதும் என்னை தானே பார்க்கனும்.  இப்படியே எவ்வளவு நேரம் என்னை சைட் அடிப்ப . இன்னிக்கு ஃபுல்லா உன்னை தூக்கி வச்சு போட்டோ எடுத்ததில் ரொம்ப டையர்ட் ஆயிட்டேன். ப்பா என்ன வெய்ட்.  நான் தூங்கப் போரேன் ப்பா " என்றவன் சென்று படுத்துக் கொள்ள,

அவனது நெருக்கத்தில் படபடக்க நின்றவள் தன்னை வெய்ட் என்றதும் உதடு சுழித்துவிட்டு,  நிம்மதி பெருமூச்சுடன் பொத்தென மெத்தையில் விழ,  அத்துணை நேரம் அமைதியாக இருந்தவன், அவளின் பயம்குறைந்த மூச்சு சத்தத்தினைக் கேட்கவும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான், யுவன் ஆதித்யதேவ்.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now