கல்லூரி வழமை போல் இயங்கிக் கொண்டிருந்தது . மதிய நேரம் உணவு முடித்துவிட்டு வளாகத்தில் உள்ள இருக்கைகளில் நண்பர்களுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தனர்.
மகிழினியும் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள். அப்போது சீனியர் ஒருவன் தன்னை வெகுநேரம் பார்ப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள். அவனை எங்கோ பார்த்தது போல் இருப்பதையும் யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவள் பார்ப்பதை அவன் அறிய வாய்ப்பில்லை . ஏனெனில் அது பெண்களுக்கே உள்ளத் தனித்துவம் தான். யாரைப் பார்க்கிறோம் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாதே!
தன்னை பார்த்துக் கொண்டிருந்தவனோ சில மணித்துளிகள் கழித்துத் தன்னை நோக்கி வருவதைக் கண்டாள் மகிழினி. உள்ளே சற்று பயந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை.
சீனியர் மாணவன் " excuse me , நான் கொஞ்சம் பேசனும் " என்று அவன் கேட்க.மகிழினி "சொல்லுங்க சீனியர் " என்றாள்.
" நீ திருச்சியா " என அவன் கேட்க மகிழினி ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
" நீ பாரதி மாமா பொண்ணு மகிழினி தான?" என்றான் அவன்
" ஆமா.. உங்களுக்கு எப்படி தெரியும் உங்கள எங்கயோ பார்த்தது போல இருக்கே சீனியர் " என்றாள் சந்தேகத்துடன்
" அட அது சரி யாருனே தெரியலன்னு சொல்லாம இப்படி சொன்னதுவரையும் மகிழ்ச்சி. நான் விஜயா பழனி பையன் . தஞ்சாவூர்க்கு நீக்கூட என் தங்கச்சி ஃப்ங்சன்ஸ்க்கு வந்தியே மகிழினி தானே உன் பேரு. அப்போ எய்ட்த் ஆர் நய்ந்த் படிச்சன்னு நினைக்கிறேன்" என்றான் அவன் சிரிப்புடன்
" ஹே விசு அத்தான் நீங்களா. ஆளே மாறிட்டிங்க அத்தான். செம்ம ஹான்ட்சமா இருக்கிங்க. பார்த்து நாலு வருஷம் ஆச்சு.. அதான் கரெக்டா ஐடென்ட் பண்ணமுடில. எப்படி இருக்கிங்க அத்தான் .அத்த மாமா எல்லாரும் எப்படி இருக்காங்க திவா எப்படி இருக்கா ( திவ்யா விசாலின் தங்கை) " என்றாள் ஆச்சரியமாக
" ஆமா விசால் தான். நல்லா இருக்கேன் மகிழ். நீ எப்படி இருக்க "என இருவரும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!