❤துணைவன் 19❤

887 56 63
                                    

மறுநாள் கள்ளம்போட முதல் நாளே நோட்டமிடும் கள்வர்களின் வேலையை இப்போது யுவனும் அமலும் செய்தனர். பள்ளியின் நுழைவுவாசலின் வெளியே உள்ளக் கடைகளில் அவர்கள் பதுங்கி சைட் அடிக்க ஏற்ற இடத்தை ஆராய்ந்து கேமராவின் கண்களிலும் அகப்படாமல் இருக்கக்கூடிய ஒரு இடத்தை தேர்வு செய்து விட்டனர்.  இனிமேல் காலை மாலை அட்டன்டன்ஸ் அங்கே தான்.

அமலிடம் அவன் படிக்கும் கல்லூரியில் சேர்ந்து கொள்ளத் தேவையான அனைத்து ஃபார்மாளிட்டீஸ்களையும் செய்ய சொல்லிவிட்டு அதற்கான ஆவனங்களையும் மெயில் செய்துவிட்டு அவரிகளின் ஊருக்கு சென்று விட்டான் யுவன் ஆதித்யா. ஒரு வாரங்கள் கடந்துவிட்டது அவன் எடுத்த முடிவை எப்படி குடும்பத்தினரிடம் சொல்வது என தயங்கிக் கொண்டிருந்தான். அப்பா ஆதவன்  அதைக் கேட்டும் விட்டார்.

"  என்ன யுவன் என்ன படிக்கலாம் என்று இருக்க. அப்ராட்ல படிக்கிறது என்றாலும் சரிதான் எங்கக் கூடவே இருந்து படிப்பது என்றாலும் சரிதான்" என்றவரிடம்

'நல்ல வேலை அப்பாவே கேட்டாச்சு இனி நம்ம சொல்லிடலாம்' என நினைத்தவன்.

" இல்லப்பா அப்ராட் எல்லாம் இல்லை நான் நம்ம அமல் கூட படிக்கப்போறேன்ப்பா  .அவன் படிக்கிற கல்லூரிலயே படிக்கிறேன். டிப்ளமா இன்டீரியர் டிசைனிங் படிக்கிறேன் " என்று ஒருவழியாக அனைத்தயும் கூறிவிட்ட நிம்மதியில் அவரின் பதிலை எதிர்ப்பார்த்து அமைதியாகிவிட்டான்.

என்னதான் மகனை வெளிநாட்டிற்கு அனுப்ப சரி என்றாலும் அவனைப் பிறிய அவருக்கு மனமில்லை. தங்களுடனே அவனை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை அவர்கள் குடும்பத்தினரின் ஆசையும் கூட. ஆனாலும் மகனின் விருப்த்திற்காகவே அதைக் கேட்டார். ஆனால் அவனோ இரண்டுமே இல்லாமல் திருச்சியில் டிப்ளமா பிடிக்கிறேன் என்றதும் அதுவும் அவர்கள் கல்லூரியிலும் அந்த கோர்ஸ் இருந்தும் அவன் அங்கே படிப்பதாகச் சொல்ல யோசித்தார். பின் தன் மகனின் சுபாவத்தையும் நினைப்பித்தார்.

தோழனே துணையானவன் (completed) Donde viven las historias. Descúbrelo ahora