❤துணைவன் 15❤

966 60 37
                                    

காற்றின் வேகத்தில்  ஆழியின் அமைதி கலைந்து அலை அடித்துக் கொண்டிருக்க , நிழல் தன் கருமையை நிலத்தில் பூச, பகலவனுக்கு முழுவதூமாக விடுப்பு  விடுத்து  சந்திரன் தன் ஆளுமையை செலுத்தும் வேளை!!!

கம்பீரமானக் கட்டமைப்புடன் சிறுசிறு விளக்குகள் தங்க நிறத்தில் மின்ன உரிமையாளரின் செல்வாக்கை கண்டவுடன் காட்சிபடுத்தும் மிடுக்குடன் இருந்தது  அந்த கெஸ்ட் ஹவுஸ்.

சொக்கும் அழகான வேளைபாடுகளுடன் வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கொண்டு அமைதியாக இருந்ததில் இதோ இந்த இரவு அவரின் கர்ஜைனையில்  நால்வர் நடங்கிக் கொண்டு நின்றனர்.

" தீனா...அஅஅஅ"  என அவர் கத்த அவரின் விழிகள் தீப்பிழம்புகளை வீசிக்கொண்டிருக்க அதை எதிர்கொள்ள திராணியற்று தன் தலையைத் தாழ்த்தியபடி கலுத்தில் சங்கிலி காதில் கடுக்கன் கையில் காப்பு அவன் கருமை நிறத்திற்கு ஏற்ற  மை ஊதா நிறத்தில் சட்டை சாம்பல் நிற ஜீன்ஸ் என பார்த்ததும் நடுங்க வைக்கும் உடலமைப்புடன் அவர் முன் பணிவாக வந்து நின்றான்  " செயின் தீனா  " .

தொழிலதிபர்கள் அரசியல் வாதிகள்  என இவனக்குத் தெரியாத நபர் யாரும் இல்லை. பணத்திற்காக சம்பவங்கள் செய்தாலும் பணம் கொடுப்பவர்கள் அனைவரும் இவனிடம் அஞ்சி பணிவுடனே நடந்து கொள்வர். அதில் முதலமைச்சர்களும் அடக்கம் அதாவது பிற மாநிலங்களில் கூட. இதோ தனக்கு வேலை குடுத்து இந்த அளவு செல்வாக்குடன் வைத்திருக்கும் தான் தெய்வமாகக் கருதும்  அவன் முதலாளி  "ஆதவன் தேவராஜிடம் " நடங்கிக் கொண்டிருக்கிறான் .

  ஆதவன் தேவராஜ்!!! பல கோடிகளுக்கு அதிபதி. இருக்கும் அனைத்துத் தொழில் துறைகளிலும் இவரின் தடம் இல்லாமல் இருக்காது. அதிலும் சிறந்து விளங்குபவர். தனது நிறுவங்களை இன்னும் முன்னோக்கிக் கொண்டுபோக உழைத்துக் கொண்டிருப்பவர் .அதில் அவ்வப்போது வரும் சிற்சில தடைகள் தரும் விடையங்களை அகற்றி விடுவது தீனா வின் வேளை. அவனை  அவருக்கு கட்டப்பஞ்சாயத்திகளில் இடம்வலம் என இருக் கைகளாக வைத்திருப்பவர். கைகளில் இருந்தப் பழச்சாறு இருக்கும் குவளையைத் தூக்கி எறிய அது சில்லுசில்லாக நொருங்கிப்போக தீனாவை ஒற்றை அழைப்பில் நடுங்கவைத்துக் கொண்டிருந்தார்.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now