❤துணைவன் 46❤

624 43 43
                                    

உணர்வுளில் உறைந்தே செல்லும் மனித வாழ்வில் அவ்வுணர்வுக்கான வடிகால்களும் இருக்க தானே செய்கிறது. குறிப்பாக எந்த ஒரு உணர்விற்கும் பொதுவான வடிகாலாக காலத்தை சொல்லலாம்.

அதில் கோபத்திற்கு ஆயுள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். காலத்தின் சுழற்சியில் கோவம் என்ற உணர்வு இருந்த இடமே தெரியாது சென்றுவிடும் என்பதே உண்மை. நாட்களின் நகர்வுக்கு பின்னும் அதே கோவம் இன்னும் இருக்கிறது என்று சொன்னால் ஏற்கவே முடியாத ஒரு கூற்று என்றே சொல்ல வேண்டும் .

நாட்கள் செல்லச் செல்ல கோபமானது மறைந்துவிடும். அதை காட்டுபவரின் மேல் உள்ள ஈகோ அதை மறக்கவிடாது செய்யும் என்பதே உண்மை . மறப்போம் மன்னிப்போம் என்று கூற்றை மறந்துவிட்டாள் மனிதயினம் மாய்ந்துவிடும் .

சில மாதங்கள் கடந்திருந்தன. கடிகாரமுட்கள் வழமை போல் தான் சுழன்றன. எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை . அவரவர் தம் மனநிலை எவ்வாறு உள்ளது என்று அவர்கள் மனம் திறந்து பேசினால் அன்றி யாருக்கும் தெரியப்போவதில்லை.

யுவன் ஆதித்யாவின் குடும்பம் மொத்தமும் வந்து மன்றாடியது .  பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வந்துவிட்டனர். இன்னும் ஒருவர் மாற்றி ஒருவராக வந்து கொண்டுதான் இருக்கின்றனர். தீனாவும் வந்தான் அவன் வயதையும் தாண்டி என்னென்னவோ பேசி மன்னிப்பு வேண்டினான். அவனது மொத்த விசுவாசத்தையும் காட்டும்படியாக தான்  இருந்தது அவனது மன்றாடல்.

நண்பர்களும் பேசிப்பார்த்து விட்டனர். சுந்தர் ஸ்வேதா, ராமும் காயத்ரியும் கூட வந்திருந்தனர். காயத்ரியின் வளைகாப்பிற்கு கூட செல்ல மறுத்துவிட்டாள். இனியாவும் கூட அழைத்து பேசினாள். பதிலென்னவோ அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்தது . அமலும் சங்கவியும் புதிதாய் பிறந்த குழந்தையை கொண்டு வந்து காட்டினர். மகிழினி குழந்தையை வாங்கி கொஞ்சியதோடு சரி.

இளங்கதிரின் மகப்பேறு கால சோர்வை நேரடியாகவே பார்க்கிறவளால் அவளிடம் போராட முடியவில்லை. இளங்கதிரிடம் இப்போதெல்லாம் பெரிதாக அவள் சண்டையிடுவதில்லை.  அவள் உணவு எடுத்து வந்தாலும் வேண்டும் என்றால் உண்பாள் இல்லையேல் சிறு தலையசைவு ஒரு சொல் அத்தோடு நிறுத்திக் கொள்வாள்.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now