தான் எடுத்த முடிவை செயல்படுத்த நினைத்த அறிவு தன் மொபைலில் முதலில் அழைத்தது மகிழினிக்கு தான் . ஆம் அவன் தன்னவளை பற்றிய விவரங்களை கேட்க நினைத்தது மகிழினியிடமே .
அவளிடம் உண்மை கூறாமல் செய்தியை வாங்கிவிடும் நோக்கிலே அழைத்தான் . ஆனால் அந்த திட்டம் மகிழினியிடம் பழிக்கவில்லை.
அழைப்புவந்ததும் அறிவிடம் விசாலை சந்தித்தது பற்றிக் கூறினால் மகிழினி . வழக்கமாக பேசும் கதைகளை பேசிவிட்டு தனக்கான கேள்விகளை தொடுக்க துவங்கினான் அறிவு .
" ஏன் மகிமா உன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் எந்தெந்த ஊரிலிருந்து வருகிறார்கள்" என்க , அந்த மகிமா என்ற அழைப்பும் நண்பர்கள் பற்றிய விசாரிப்பும் ஏதோ கூறியது அவள் மனிதில் .
இதுவரை பள்ளி பருவம் முதல் கல்லூரி வந்தவரையிலும் தாமே தன் நண்பர்கள் பற்றி கூறியபொழுதும் திரும்பி ஒரு விஷயம் கூட அவர்களை பற்றி கேட்டிறாத தன் தமையன், தனக்கு வேண்டியதை பெரும்போது மட்டும் அரிதாக அழைக்கும் அந்த மகிமா என்ற அழைப்பும் தம்மிடமிருந்து எதையோ கேட்கவே இந்த அழைப்பு என்று புரிந்து கொண்டாள்.
அதை சோதிக்கும் வகையில் அவள் பேச்சை மாற்ற தமையனை நோக்கிக் வேறு கேள்விகளை கேட்டாள்.
" ஹான்.. அறிவு உன் ஃப்ரண்டு நேம் என்ன சதீஸோ சுகீஸோ அவர் லவ் என்னாச்சு செட் ஆய்டுச்சா சொல்லிட்டாரா" என்க
" அ.. அது அதவிடு மகிமா நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு " என்று அவனது வேலையிலே கண்ணாக இருக்க மகிழினி தன்னுள் சிரித்து கொண்டாளும் அவனை மேலும் கடுப்பேத்தும் பெருட்டு மீண்டும் அதையே அவள் கேட்டுக்கொண்டிருக்க
அதில் கடுப்பானவனோ " என்ன மகிழ் அவன் எப்படி போன என்ன நான் கேட்டத இன்னும் சொல்லவே இல்ல .காது கேட்க்கிறதா நான் கேட்டு கொண்டே இருக்கேன் நீ எதையோ பேசிட்டு இருக்க" எனக் கத்திவிட்டான் .
அவன் நிலையை எண்ணி சிரித்துக் கொண்டாள் ' மவனே எங்கிட்டயே எதையோ மறைக்க பார்க்கிற?! இப்போ நீ சொல்லித்தான் ஆகனும் 'என நினைத்துக் கொண்டு
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!