❤துணைவன் 47❤

747 48 64
                                    

பரிதியோன் தன் பணியில் பயணிக்கத் துவங்கியிருந்தான் . படரவிட்ட பவளக்கொடியாய் பஞ்சுமெத்தையில் படுத்திருந்தாள் மகிழினி. தன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த யுவன் ஒரு நொடி திகைத்து நின்றான்.

'நம்ம பெட்ல யாரு படுத்திருக்கது ?' என்றது அவன் மூளை. முட்டாள்! அவன் அறையில் அவன் கட்டிலில் வேறு யார் படுத்திருப்பார்? பதிலறிந்ததும் ஆனந்த கூச்சலிட்டது அவன் மனம். காலை எழுந்த பிறகும் கனவு வருமா? கண்களை நன்கு கசக்கிப்பார்த்தான். அவள் அப்படியே தான் உறங்கிக் கொண்டிருந்தாள். ஆக இது கனவல்ல! அவள வந்துவிட்டாள். அவன் அறையில் கட்டிலில் அவன் மனைவி. அவன் மகிழினி! மகிழ்ச்சியில் மூச்சடைத்தது அவனுக்கு .

எல்லாம் சற்று நேரம் தான் எச்சரிக்கை மணியடித்தது மனது. அவள் கண்ணிலே பட்டுவிடக்கூடாது என்று முடிவோடு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடைமாற்றியவன் , காலில் சுடுதண்ணீர் பட்டதுபோல் அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டான்.

திருச்சியில் அன்று மகிழினி சண்டையிட்ட பிறகு இத்தோடு நான்கு நாட்கள் ஆகிறது. அவன் இங்கு வீட்டிற்கு வரவில்லை. யார் அழைத்தாலும் எடுக்காது தனிமையை யாசித்திருந்தான். காயம் தாங்கிய மனதிற்கு தனிமையின்றி தக்க மருந்தேது!

இன்று தான் வருகிறான். மகிழினி வந்திருப்பது தெரிந்திருந்தால் ஓடி வந்திருப்பானோ என்னவோ. அப்படியே வந்தாலும் அவளை நேரடியாக சந்தித்திருப்பானா என்றால் சந்தேகமே! அதிகாலையிலே இப்படி ஒரு ஆனந்தக்காட்சி அவன் மனைவி தருவாள் என சிறிதளவும் நினைக்கவில்லை. அதை முழுதும் அனுபவிக்க முடியாது இதோ அலுவலகம் நோக்கி ஓடிவிட்டான்.

அன்று அவள் மனபாரம் முழுதையும் இறக்கி வைத்து அழுது ஓய மறுநாள் காய்ச்சலில் கிடந்தாள். பெரிதாக என்றெல்லாம் இல்லை. சிறதளவு சூடும் பெருமளவு சோர்வும் அவ்வளவே!

அன்று முழுதும் ஓய்வெடுத்தவள் மறுநாள் விடியலில் பெட்டியோடு வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாள் அவர்களுக்கு . அறிவும் அவன் குடும்பமும் சேர்ந்து செல்லலாம் என்க அதை மறுத்துவிட்டு விரட்டியடித்தார் போல் கோவை வந்துசேர்நதாள். அங்கே வரும்போது அவ்வளவு ஆவல் இருந்தது அவளுக்கு. ஆனால் தேடிவந்த அவள் மணாளன் தான் இருக்கவில்லை. அவளுக்கோ ஏமாற்றமாகிவிட்டது.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now