இனியாவின் குடும்பமும், குழந்தைகளும், பெரியவர்களும் சிறிய திரை அமைப்பு கொண்ட அறையில் இருந்தனர். படம் பார்க்க திரையறங்கிற்கு செல்வது போல் ஜூஸ், ஸ்நாக்ஸ் என முழு ஏற்பாட்டுடன் இருந்தனர்.மகிழினி தங்கள் அறையில் அலமாரியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். படுக்கையில் அமர்ந்தவாறு அவளை குறு குறுவென பார்த்திருந்தான் யுவன் ஆதித்யா.
மெதுவாக அவளின் அலங்காரங்களை பார்த்தான் அவன்.நீண்ட காட்டன் பாவாடை , முட்டிக்கு மேல் வரை நீண்ட டாப்ஸ், ஒற்றை முடி கூட விழாது இழுத்துப் பிடித்து கொண்டையிட்டிருந்தாள். புருவ மத்தியில் பொட்டில்லை, உச்சியில் குங்குமம், கழுத்தில் தாலிச்சரடு, வளையல் அணியாது விரலில் அவர்களது நிச்சய மோதிரம் மட்டுமே இருந்தது . அது தான் அவள் அலங்காரம். அனைத்துப் பெண்களும் இயல்பாக செய்யும் அலங்காரம் தான். அதை அலங்காரத்தில் கூட சேர்க்க முடியாது. வெகு எதார்த்தமாக இருந்தாள் மகிழினி. இதை தான் அவள் உள்ளே வந்ததிலிருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் யுவன்.
' இதென்ன இவ இன்னிக்கு இவ்வளவு அழகா தெரியுறா? முகம் பலபலன்னு இருக்கு. மைல்ட் மேக் அப் எதுவும் போட்டிருப்பாளோ. இல்லையே அப்படியும் தெரிலயே. இது விட நல்ல ட்ரெஸ் எல்லாம் பண்ணியிருக்கும் போது கூட இவ்வளவு அழகா தெரில. இந்தக் காஸ்ட்யூம்... ப்ச்... சம்திங்!!! ..ஹ்ம்ம் ' இதை தான் அவன் வெகு நேரமாக யோசித்திக் கொண்டிருந்தான்.
தளர தளர புடவை கட்டி, நகை அணிந்து, பூச்சூடி இருக்கும் பொழுது தெரியும் அழகை விட, எண்ணை வைத்து வழித்து கொண்டையிட்டு, சாதாரண நைட்டியில் வியர்வை வழிய தெரியும் அழகு என்றுமே ஒரு சதவிகிதம் முன்னதை விட அதிகம் தான் பெண்களுக்கு !
அவன் பார்ப்பதை கவனித்தாளும் கடமையே கண்ணாக இருந்தவள் வந்த வேளை முடிந்ததும் அவனிடம் வந்து " ஏன் டா பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்க்கிற மாதிரி பார்க்கிற " என்க
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!