❤துணைவன் 17❤

898 60 55
                                    

அறிவு அவர்களை அழைத்துச் செல்ல அனைவரும் குழப்பத்துடன் சென்றனர். யுவினோ தன்  குட்டு வெளிப்பட்டுவிட்டதோ  என வருத்தத்துடன் இருந்தான்.

அறிவு தங்கியிருந்த அறையை அடைந்துவிட காலிங் பெல்லை அழுத்திவிட்டு கதவு திறக்கக் காத்திருக்க அது திறக்கப்பட்டதும் அங்கே இருந்தவர்களை குழப்பத்துடன் பார்த்தனர் .

கதவை திறந்தது மஞ்சுவின் கணவர் காவல் அதிகாரி சக்திவேல். அவர்கள் உள்ளே செல்ல அங்கே மஞ்சு ஒரு கதிரையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தும் அதே யோசனை தொற்றிக்கொள்ள இருவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு ஆளுக்கொரு இடத்தில் சென்று அமர்ந்தனர்.

யுவனின் மனமோ ' வசமா மாட்டிக்கிட்டோமே ஒன்னா இருக்காங்க விஷயம் தெரிந்தால் வச்சு செஞ்சுருவாங்களே  பதட்டப்படாம இரு !!! முடிஞ்சா எப்படியாவது தப்பிதடனும் யுவி'   என நினைத்துக் கொண்டிருக்க

அதைக் கலைக்கும் விதமாக சக்திவேல்  " என்னப்பா யுவன்.  ஏதோ பலமா ப்ளான் பண்றது மாதிரி தெரியுது " என நக்கலாகக் கேட்க

" நீங்களுமா " எனும் பார்வையில் அவரைப் பார்த்தான் யுவன் ஆதித்யா

இதுவரையில் அவனைப் பற்றிய முழுவிசயங்களையும்  தெரிந்தவர் அவரே. ஆனால்  இதுவரை அவருக்கு தெரிந்ததை யாரிடமும் பகிர்நதது இல்லை . மனையாளிடம் கூட .

அறிவு அவன் கையில் இருந்த கவரிலிருந்து  ஒரு கார்டை எடுத்து யுவனிடம் நீட்டி " இது என்ன யுவி" என வினவ அதை அவன் நண்பர்கள் ஒவ்வொருவராகப் வாங்கிப் பார்த்து விட்டு யுவனிடம் பதிலுக்காக நின்றனர்.

அது ஒரு க்ரீட்டிங் கார்டு.

அதில் இதயவடிவிலான சின்னங்கள் ஆங்காங்கே இடம் பெற்றிருக்க நடுவிலே ஒரு கவிதை இருந்தது

"பெண்ணே நீ  என்னை ஆட்சி செய்ய
என் இதயத்தின் செங்கோல் உனக்கானதடி !!!
ஆயிரம் கண்கள் என்னைச் சுற்றினாலும்
எந்தன் விழிகள் தினமும் உன்னை மட்டுமே காண  சிறகடிக்கிறது!
அதை எப்படி சொல்ல!!!
கவிதை எனும் காதல் புறாவை தூது அனுப்பி
உன்னைத் திருடியக் கள்வனாக உன் இதயம் எனும் கோட்டைச் சிறையில் ஆயுள் கைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!! "
                           - MR. Romeo ❤

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now