❤துணைவன் 13❤

949 60 77
                                    

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. வழக்கம் போல் கல்லூரி பல இனிய நிகழ்வுகளை சேமித்துக் கொண்டது. மாணவர்களின் நட்பு இரட்டிப்பாக, தேர்வுகள்  நிகழ்ச்சிகள் சுற்றுலா என செயல்பட்டுக் கொண்டிருந்தது கல்லூரி .

மாணவர்களோ தங்கள் தேர்வுகளை சிறப்பாக  எழுத உழைத்தனர் .சீனியர்கள் ஜூனியர்கள் இடையே ஒரு நல்லப் பிணைப்பு ஏற்ப்பட்டிருந்தது.

ஆசிரியராக இருந்த மஞ்சு தமது மாணவர்களின்  வீட்டில் ஒருத்தராகவே மாறிப்போனார்.தோழமையுடன் பழகி அவரிகளின் தவறுகளைத் திருத்தினார். அவரின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி என மாணவர்களே தனது தமக்கையாக நினைத்து அனைத்து பணிகளையும் செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்களில் பணியைத் தொடர்ந்தார்.

தன் எண்ணம் இன்னும் நிறைவேறாது இருக்க அதே வெறியுடன் சுற்றிக்கொண்டிருந்தான் விசால்.

இங்கு வெறுப்புடன் துவங்கிய காயத்ரி ராம் சண்டைகளோ இன்று செல்லச்சண்டைகளாக மாறிப்போயின. காதலை வெளியில் சொல்லாமலே  ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை  அக்கறை என அவர்களின் காதல் பெயரில்லாமல் வளர்ந்தது.

காலம்  தன் போக்கில் செல்ல குடும்பம் மட்டுமே  இருந்த மகிழினியின்  உலகில் இப்போது நண்பர்களும் இணைந்துவிட  வாழ்வில் எந்தக் குறையும் இல்லாமல் தனது கல்லூரி காலத்தை ரசித்து நகர்த்திக் கொண்டிருந்தாள் .

அந்த ஒரு நாள்  வரும் வரை!!!!

கதிரவன் இன்னும் வெளியே வராமல் வென்பஞ்சு மேகங்களிடையே கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருந்தான் . பறவைகள் தங்கள் இருப்பை நிலைபடுத்த மரக்கிளைகளிடையிருந்து பாடிக்கொண்டிருந்த இனியக் காலை அது!

ஆதவன் மருத்துவக் கல்லூரி விடுதிகள் என்றும் விட சற்று பரபரப்பாகவே இருந்தது . சீனியர்கள் தங்கள் படிப்பை முடித்து அடுத்த நிலைக்கு செல்லும் மகிழ்ச்சியிலும் ஜூனியர்கள் தமக்கு வழிகாட்டிகளாக இருந்த சீனியர்களை பிரியப்போகும் சிறு வருத்தம் கலந்த மகிழ்ச்சியிலும் அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கப் போகும் நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now