❤துணைவன் 3❤

1.8K 81 69
                                    

கவுன்ஸ்லிங் அப்ளை செய்து கவுன்ஸ்லிங் அட்டன் செய்வதற்க்கான நாளும் நெருங்கியது. அதற்க்காகச் சென்னை செல்ல வேண்டி முதல் நாள் தமது உடமைகளை பேக் செய்து கொண்டிருந்தாள் மகிழ்.
அந்நேரம் மகிழின் கைப்பேசி அலற அதை எடுத்துப் பேசினாள்.

" சொல்லுடா என்னக் கோவைக் காத்துத் திருச்சிப் பக்கம் வீசுது . ஹே நிஜமாவா.  இரு வரேன் " என்றாள் உற்சாகத்துடன்

தனது பெரியம்மாவின் மகன் அறிவழகன் வாசலில் நின்று கொண்டிருப்பதாகக் கூறத் தன் வேலையை நிறுத்தி விட்டு அண்ணணைக் காணச் சிட்டாகப் பறந்தாள் .பின் நண்பன் போன்ற தனது சகோதரனை வெகு நாட்களுக்குப் பிறகுக் காணப்போகும் மகிழ்ச்சி இருக்காதா என்ன.கதவைத் திறந்ததும் தன் அண்ணணிடம் சென்று ஒட்டிக்கொண்டாள் மகிழினி.

" டேய் அண்ணா!!! எப்ப வந்த? வாட் அ சர்ப்ரைஸ் !!! நேற்று பேசியப்போது கூட சொல்லல ப்ராடு" என்றாள் அவனிடம் தொங்கிக் கொண்டு

"ஹே.. என்னப்பா  எப்பவும் சண்டைக்கு  நிப்ப?  இன்னிக்கு என்னப் பாசம் பொங்கி வழியுது " என்றான் அறிவு தன் தங்கையை தோளில் அணைத்துக் கொண்டு

" ச்சி!!! எருமக் கொஞ்சம் கூடப் பாசமே இல்லடா உனக்கு. எவ்வளவு நாட்களுக்கு பிறகு பார்க்கிறோம்ன்ற நினைப்பே இல்லடா .வந்ததும் சண்டப்புடிக்கிற " என்றாள் அவனை விளையாட்டாக அடித்து

"அட!!! எவ்வளவு நாளாப் பார்க்காம இருந்தா என்ன. அதான் ஒன்னுவிடாம தினம் கால்ப் பன்னி ஓட்ட டேப்ரெக்காடர் மாதிரிப் பேசுறியே அப்பறம் என்னத் தாயே " என்றான் அவனும் விடாது

"சரி சரி  இன்னும் எவ்வளவு நேரம் வாசல்ல நிக்கிறதா  உத்தேசம் ? முதல்ல உள்ளபோங்க வந்ததும் அவங்கூட மல்லுக்கு நிக்காம ஜூஸ் எடுத்துட்டு வந்து குடு மகிழ் "  என்றார் கமலா

" ஆமா. .உங்கப் பாசமலர் படத்தக் கொஞ்சம் உள்ள வச்சு ஓட்டுங்க " என்றான் மதி

"சித்திக்கு என் மேல எவ்வளோ அன்பு !!!ச்ச உங்கக்கிட்டலான் அதுக் கிடைக்காதுப்பா என் சித்தின்னா சித்திதான் " கமலாவை கொஞ்சிக் கொண்டான் அவன்

தோழனே துணையானவன் (completed) Dove le storie prendono vita. Scoprilo ora