❤துணைவன் 43❤

570 43 78
                                    

" ஏன் என் குடும்பத்தை கொண்ணிங்க ? சொல்லுங்க ஏன்? " நடுக்கூடத்தில் இருந்த ஆதவனிடம் கத்திக்கொண்டிருந்தாள் மகிழினி. மொத்தக்குடும்பமும் அங்கே தான் இருந்தது.

" அய்யோ அண்ணி ப்ளீஸ் " தடுக்க வந்தாள் அகிலா

" உனக்கும் எனக்கும் பேச்சில்ல. எனக்கு தெரியும்ன்னு நினைச்சு தானே எல்லாத்தையும் சொன்னா?  இல்லன்னா நீயும் மறைச்சிருப்ப தானே? பேசமா விலகிடு.  உங்கிட்ட பேச நான் தயாராயில்ல " முகத்தில் அடித்தாற்போல் சொல்ல அகிலாவிற்கு முகம் சோர்ந்துவிட்டது. கண்கள் கலங்கி அழுகை வந்தது. தவறு செய்துவிட்டோமே என்றது மனம். இதனால் அண்ணனின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற அச்சம்.  உடல் நடுங்கியது. பேச நாவெழாமல் அமைதியாக ஒதுங்கினாள்.

மகிழினியின் இயலாமை சோகம் கோபம் கண்ணீர் என் அனைத்தாலும் அவ்வீடு மூழ்கிக்கொண்டிருந்தது.

" அட பாவிகளா!  நம்ப வச்சு ஏமாத்திட்டிங்களே.  எங்க குடும்பத்துக்கு இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்ய எப்படி மனசு வந்திச்சு உங்களுக்கு. எப்படி எல்லாம் நாடகமாடி என்னை ஏமாத்திட்டிங்களே . நீங்க நல்லா இருப்பிங்களா? பணம் இருக்க தைரியம் தானே! இவளால என்ன பண்ணமுடியும்னு தானே ஏமாத்திட்டிங்க. உண்மை தானே என்னால் எதுவும் பண்ண முடியலயே.  இதோ ஏமாந்து போய் தானே நிற்கிறேன். இப்படி குடும்பமா சேர்ந்து கழுத்தை அறுத்திட்டிங்களே! " கதறினாள் அவள்

" மகிழ் ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா பேசு " அவளை சாந்தப்படுத்த அருகில் வந்தாள் இளங்கதிர்.

அவளை விட்டு விலகி நின்றவள் " எதைடி பொறுமையா பேச சொல்ற. செத்தவங்க என் குடும்பம் ! என் மதி!  என் அம்மா!  என் அப்பா!  எதை மறக்க சொல்ற? எதை பொறுமையா பேச சொல்ற? ஆனால் என் கூடவே இருந்து ஏமாத்தின முதல் துரோகி நீ தான் டி. உனக்குகாக எதை செஞ்சாலும் உன் மனசு நோகமா செய்யனும்னு ஒரு ஒரு விசயத்தையும் யோசிப்பேனே. இப்படி என் மனசக்கொண்ணுட்டியே டி பாவி.

எல்லாம் தெரிந்தும் மறைச்சுட்டல்ல.  உன் புருசனும் உனக்கு நல்லா கூஜா தூக்குறான் போலயே! அது சரி உனக்கும் இந்த குடும்பத்து இரத்தம் தானே . அதுதான் துரோகம் ஊறிப்போயிருக்கு . உன்ன கட்டுனவன்ட்ட சொல்லு அவன் எனக்கு அண்ணனும் இல்ல நான் அவனுக்கு தங்கச்சியும் இல்ல " யாரிடம் என்ன எதை பேசுகிறோம் என்ற தெளிவு அவளுக்கு சுத்தமாக இல்லவேயில்லை.  அவளுக்கு நினைவிருந்ததெல்லாம் அவள் குடும்பத்தின் இழப்பும் அவர்களின் துரோகச்செயல் மட்டுமே!

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now