❤துணைவன் 1❤

3.8K 108 108
                                    

காலைக் கதிரவன் மேகங்களுடன் தன் விளையாட்டை நிறுத்தி விட்டு பூமியில் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்க,அவளின் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் குறைந்ததற்காக தந்தையிடம் ஏச்சுகள் வாங்கிக் கொண்டிருந்தாள் மகிழினி,நம் நாயகி.

"என்ன மார்க் எடுத்து வச்சுருக்கா பாரு உன் பொண்ணு"என அவள் அப்பா பாரதி மகளிடம் முழுக்கோவத்தையும் காட்ட இயலாமல் தன் மனைவியின் புறம் சென்றார்.

அது ஒன்றும் சொல்ல முடியாத அளவு குறைந்த மதிப்பெண் ஒன்றும் இல்லை.மெரிட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது அவ்வளவு தான்.அந்த கோபத்தில் தான் பாரதி தன் செல்ல மகளை இன்று வசைபாடிக் கொண்டிருந்தார்.

"ஆமா லீவு நாள்ள வெளில போகும் போது அனுப்பாதிங்க படிக்கட்டும்ன்னு சொன்னா என் பேச்சை எங்க கேட்டிங்க? நீங்க தான ரிலாக்ஸ் பன்னட்டும்ன்னு அனுப்பிவச்சிங்க.இப்ப வந்து என்ன சொல்றிங்க"என்றார் அவர் மனைவி கமலா.
அதற்கு மேல் கமலாவிடம் வாய் கொடுத்து வாங்கிக் கொள்ள அவர் முட்டாளா என்ன?

"பாரு உன்னால் உன் அம்மாட்ட நான் திட்டு வாங்குறேன்..ச்ச!!"என்று மனைவியிடம் அடுத்துப் பேச இயலாதவராக மகளிடமே மீண்டும் சென்றார் பாரதி.

'ஆமா... இல்லாட்டி நீங்கள் திட்டே வாங்க மாட்டிங்க அம்மாவிடம்?என்னால் வாங்கராங்கலாம்ல.. ம்க்கும்'என தான் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் கவலை சிறிதும் இல்லாமல் தந்தையை மனதில் கிண்டலடித்தாள்.

இங்கே இவள் தந்தையைப் பார்த்து சிரிக்க,அவளைப் பார்த்து ஒரு ஜீவன் சிரித்துக் கொண்டடிர்ந்தது.வெளியே வரும் சிரிப்பை அடக்க வேறு புறம் திரும்பியவள் அதைக் கண்டு கொண்டாள்.

'டேய் மகனே என்ன பார்த்தா சிரிக்கிர?இருடி இன்னும் ஒருவர்ஷம் தான் நீயும் பத்தாவது பொது தேர்வு எழுதுவல.. அப்ப பார்த்துகிரேன் டா உன்ன'என தன்னைப் பார்த்தும் நக்கலாக சிரிக்கும் ஆசைத் தம்பியை மனதினில் வறுத்தவள் வெளியே பாவமான முகத்துடன் நின்றாள்.

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now