மாலை நேரம் ....
" மகிழ் உனக்கு பிடித்த படிப்பை வேண்டாம் என்று சொன்னதால் அப்பா மேல கோபம் இல்லையே மா"ஹஎன்று பாரதி கேட்க , தன் நலனுக்காக தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை புரிந்து அவரிடம் சமாதனம் கூறினாள் அவள்.
" அதெல்லாம் ஒன்றும் இல்லப்பா இதையும் எனக்கு பிடித்து தான் தேர்வு செய்தேன்.நான் நல்லா படிப்பேன் டாடி. நீங்க ஃபீல் பண்ணாதிங்க. இப்போ கிளம்பும் நேரம் என்னையும் அழ வைத்திடுவிங்க போலப்பா " தன் தந்தையை சமாதானம் செய்தாள் மகிழினி
" சரிமா ...நான் வருத்தப்படல நீ ஹாப்பியாருடா .எதுக்கும் அழக் கூடாது.எல்லாருடன் ஃப்ரீயாப் பழகு..சேஃபா இருந்துக்கோமா..எதாச்சும் அவசரம் என்றால் அறிவை கூப்பிடு...டெய்லிக் கால்ப் பண்ணு ...நல்லா சாப்பிடனும் .
நம்ம எதுவும் பர்சேஸ் பண்ணவே இல்ல வீக்கென்ட் அறிவோட போனாலும் சரி .இல்ல ஃப்ரண்ட்ஸ் கூடப் போனாலும் சரி. சாப்பிங் பண்ணிக்கோ டா.. பட் ரொம்ப சேஃபா இருக்கனும் ...பணம் தேவைப்பட்டா செல்லுடா அமௌன்ட் ட்ராஸ்ஃபர் பண்ணிடலாம் . புரியுதாடா."எனத் தந்தையாக மகளைப் பிரிந்து இருக்கப்போகும் வருத்தத்தை அட்வைசாக வாரி வழங்கிக் கொண்டிருந்தார் பாரதி.அதே கவலை மகிழினிக்கும் இருந்தாலும்அதை வெளிக்காட்டாமல் அவரைத் தேற்றினாள்.
" ஹ..ஹா...ஹா... என்ன டாடி நான் என்ன குழந்தையா இதெல்லாம் சொல்லிட்டு இருக்கிங்க. நான் பார்த்து இருந்துப்பேன்ப்பா " என்றாள் மகிழினி சிரிப்புடன்
தன் மகளின் சிரித்த முகதைப் பார்த்த மன நிறைவோடு. ஹாஸ்ட்டல் வார்டனிடம் செல்லி ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து மகிழினியிடம் இருந்து விடைபெற்றனர் அறிவும் பாரதியும்.அவர்களுக்கு இன்முகத்தோடு விடைக் கொடுத்தாள் .
அவர்கள் சென்ற அடுத்த நொடி வெளியே வரப் போட்டியிட்டுக் கொண்டிருந்த கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.
' என்ன மகிழ் இதுக்கெல்லாம் அழக் கூடாது உன்னோட ஸ்டைலே வேற மா. எல்லாத்தையும் ஹாப்பியா ஃப்பேஸ் பண்ணனும் 'எனத் தன்னை தானே சமன்படுத்திக் கொண்டு தன் உடமைகளை அறையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
தோழனே துணையானவன் (completed)
Romanceஅவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!