❤துணைவன் 25❤

910 52 96
                                    

அந்திநேரம் கதிரவன் தன்  விரல்களை மடக்கி மறையத் துவங்க அந்த பார்ட்டி ஹாலில் இளைஞர் பட்டாளம் ஆராவாரத்துடன் இருந்தனர்.

சிறிது நேரத்தில் கொண்டாட்டம் துவங்க உள்ள நிலையில் வாசலில் மகிழினி,இளங்கதிர்,காயத்ரி மற்றும் இனியா வரவிற்காக காத்திருந்தனர்  யுவன் ஆதித்யா,ராம்குமார்,சுந்தர் ரவி.

யுவனின் நினைவுகள் முழுதும் தான் தேர்வு செய்த ஆடை மகிழினிக்கு எப்படி இருக்கும் என்றே சிந்திக்க விழிகள் இரண்டும் வரவிற்கு ஏங்கியது.

"இன்னுமாடா இவங்க வரவில்லை. இங்க என்ன பொண்ணாடாப் பார்க்கப் போறாங்க. எவ்வளவு நேரம் தான் கிளம்புவாங்களோ. ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்ண போராங்க. இந்த பொண்ணுங்களே இப்படித் தான் போல"என்று ராம் அலுத்துக்கொள்ள அவனைப் பார்த்து சிரித்துவிட்டு அமைதியானான் சுந்தர் ரவி. யுவன் இது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

புல்லட்டின் ஒலி யுவனின் நினைவைக் கலைக்க அவன் நிமிர்ந்துப் பார்க்க அங்கே சக்திவேல் மஞ்சு ப்ரியா ஜோடியாக வந்தனர். அவர்களை இன்முகத்துடன் வரவேற்றனர். ராமின் வாய் தான் சும்மா இருப்பேனா என்ன?என்றது.

"மேம் என்ன உங்கக் காக்கிச் சட்டை இன்று கருப்புச் சட்டையில் இருக்கு போல"என்று கிண்டலடிக்க

வண்டியைவிட்டு இறங்கி வந்த சக்திவேல் ராமின் கழுத்தை சுற்றி கையைப் போட்டு மற்றொரு கையில் தன் மணிகட்டைப் பற்றிக் கொண்டு விளையாட்டாகக் கழுத்தை நெரித்துக் கொண்டு"வேறு எதுவும் இல்லை ராம் அன் அஃபீசியலாக ஒரு என்க்கவுன்டர் பண்ணபோறேன். அதற்கு தான் அன்யூனிஃபார்ம். வேண்டும் என்றால் நீயும் வாயேன்?சூப்பராக ஒரு சீன் பார்க்கலாம்"என்று நக்கலாக கூற

அவரின் பிடியில் சிக்கித் தவித்தவன்"அச்சோ சார். தெரியாமல் உங்களை வம்புக்கு இழுத்துவிட்டேன். இந்த விசப்பரிட்சைக்கு நான் வரவில்லை. என்னைப் பெத்தவங்களுக்கு நான் ஒரே பிள்ளை. இந்தக் கைகளைக் காலாக நினைத்துக் கேட்கிறேன். ஆள விடுங்க"என்று கெஞ்ச

தோழனே துணையானவன் (completed) Where stories live. Discover now