நீண்ட பாகமாகத்தான் இருக்கும்... விருப்பமில்லாதோர் தவிர்த்து விடு செல்லலாம்.. நேரத்தை வீணடிக்க வைத்திருந்தாலும் தையை கூர்ந்து மன்னிக்கவும்...
__________________________________________________________
தீராவின் கண்ணோட்டத்திலிருந்து..
தீரா : பப்பிமாஆஆஆஆஆ எங்க இழுத்துட்டு போர என்னைய... நா ரெஸ்ட் எடுக்கனும் ம்ம்ம்ம்ம்
வான்மதி : ஒரு நாள் தூங்கலன்னா நீ குறைஞ்சு போய்ட மாட்ட பாப்பு வா வா டைமாகுது
தீரா : அடடடடா... எங்க போறோம்னாவது சொல்லேன்.... நா ஆல்ரெடி தப்பிக்கனும்...
வான்மதி : வேதபுரத்துக்கு தான் வேற எங்க
தீரா : அங்க ஏன் பப்பிமா
வான்மது : எல்லாம் காரணமாத் தான்...
தீரா : சொல்லலன்னா நா வர மாட்டேன் வானுமா அப்ரம் உன்னாலையும் போ முடியாது...
வான்மதி : எல்லாம் காரணமாத்தான்... டக்குன்னு வா... ஆல்ரெடி லேட்டாய்டுச்சு நீ வேற அடம்ப்புடிக்காத
தீரா : ஆமால்ல...
வான்மதி : ஆமா ஆமா வா போலாம்...
தீரா : சரி சரி வா போவோம் நானும் தப்பிச்ச மாரி இருக்கும் என தன் சில மந்திரங்களால் வேதபுரத்திற்கு நேரடியான ஒரு வாயிலை உருவாக்கியதும் இருவருமாய் உள்ளே செல்ல " ஏ தீரு கீழே குனி டி " என காதிற்கருகில் கேட்ட அலரலில் முன் சென்ற தீராவை இழுத்து கொண்டு அப்போதே அவ்வாயிலை விட்டு ஒரு காலை மட்டுமே வைத்த வான்மதி தொபக்கடீரென கீழே விழ அவர்களின் தலையை தாக்கவிருந்த அந்த அம்பு நுனியில் சீரிச் சென்று அவர்களின் பின்னிருந்த மரத்தில் பதிந்தது
நெஞ்சாங்கூட்டில் துடிக்கும் இதயத்தின் சத்தம் அருகில் அமர்ந்திருப்போர் வரையிலும் தெளிவாய் கேட்க " ஹே நா கரெக்ட்டா குறி வச்சிட்டேன் " என கைதட்டி கொண்டு குதித்த மாயாவை இருவருமாய் பீதியுடன் நிமிர்ந்து பார்த்தனர்
அவர்களுக்கு பத்தடி முன்னே மாயா குதியாய் குதித்து கொண்டு கை தட்டி கொண்டிருக்க அவளின் அழகிய காற்கூந்தல் அவளின் ஒவ்வொரு துள்ளலிலும் அவளூடு எகிரி குதிக்கயில் அவளவனின் முகத்தையும் மென்மையாய் தீண்டி வர வில்லை பிடித்து கொண்டு தன்னவளை பார்வையாலே வருடி கொண்டு ஒரு புன்னகையுடன் நின்றிருந்தான் ஆதவ்
YOU ARE READING
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...