மாயம் - 9

356 28 38
                                    

அந்த மூன்று முக்கோண வடிவ பெட்டிகளுமோ முக்கோணம் போல் தான் அமைக்கப்பட்டிருந்தது... முதலாவது சிகப்பு பெட்டியில் நித்யாவும் இடையிலிருந்த நீல பெட்டியில் ஆருன்யாவும் மூன்றாவதாய் இருந்த வெள்ளை பெட்டியில் அதித்தியும் இருந்தனர்...

அவர்கள் மூவரின் நடுவிலும் மலர் போல் எழுந்து நின்ற ஒரு கருவியிலிருந்தே மின்சார விட்டு விட்டு பாய்ந்து கொண்டிருந்தது...

ஆருன்யா அவள் வலுவனைத்தையும் இழந்து கீழே விழுந்ததும் இது தன் முறை என்பதை உணர்ந்த அதித்தி கண்ணீரை துடைத்து விட்டு கண்களை இறுக்கி மூடி கொண்டாள்..

இப்போது அந்த மின்சாரம் அதித்தியை தாக்க அதித்தியின் அலரல் அவ்விடத்தை நிறைத்து கொண்டது.. மூவரின் அலர்களையும் ஈண ஸ்வரத்தினை இரசிப்பதை போல் கண்களில் எகத்தாள சிரிப்புடன் கால் மேல் கால் போட்டு கொண்டு நடுநயமாய் அமைக்கப்பட்ட மூன்று சிம்மாசனங்களின் அருகில் அமைக்கப்பட்டிருந்த எட்டு சிம்மாசங்களில் அவளுக்கான சிம்மாசனத்தில் ராஜ தோரணையுடன் அமர்ந்திருந்து பார்த்து கொண்டிருந்தாள் அருளவர்தினி

அடுத்த பத்து நிமிடத்திற்கும் விடாது அதித்தியின் கதறல் கேட்க நித்யா மெல்ல அவளது இமைகளை பிரித்து பெருமூச்சறித்தவாறு அருளாவை ஏறிட்டாள்..

அருளவர்தினி : என்ன டி .. உமது விழியாலே எம்மை எரிக்க போகிறாயோ.. முயன்று பார்.. உம்மை தடுக்க இங்கு யாவரும் அன்று.. உமது சக்திகளை கூட மீண்டும் ஈட்டிருப்பாயே.. என நக்கலாய் கேட்டாள்..

நித்யா : மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறாய் அருளா.. என அதே வெறித்த பார்வையுடன் நித்யா கர்ஜித்தாள்..

அருளா : ஹ்ம் கடந்த திங்கள் வரை எம் முன் வாலில்லா சர்ப்பமாய் இருந்தவள் தற்போது எம் நாமத்தையே ஐயமின்றி உரைக்கிறாய்.. மகுடமணிந்த ராணியென்ற எண்ணமா உமக்கு....

நித்யா : யான் ராணியல்ல டி.. இச்சர்ப்பலோகத்தின் முதலாம் யட்சினி.. என அவள் சட்டென எழுந்த வேகத்துடன் முழங்க அருளவர்தினி ஒரு நொடி உறைந்து தான் போனாள்...

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora