ஆதியன்த் உள்ளே நுழைந்ததும் முகிலின் பின் மற்றவர்களும் உள் நுழைந்திருந்தனர்... ஆயுத கள அறையே இருளில் மூழ்கியிருந்தது...
அந்த அறையின் ஒரே ஒரு மூலை தான் எப்போதுமே சிம்மயாளிகளின் சக்தியினால் அப்படி இருள் சூழப்பட்டிருக்கும் ஆனால் முழு அறையும் இதுவரையில் இருள் சூழ்ந்து சஹாத்திய சூரர்களே கண்டதில்லை...
ஆதியன்த் அந்த வாயிலருகிலே உள் செல்லாமல் தடைப்பட்டு நின்றிருந்தான்... அந்த அறை முழுவதிலும் ஒரு அமானுஷ்ய அமைதி நிலவ ரவியினால் மாத்திரமே சிம்மயாளிகளின் ஆக்ரோஷமான ஏக பெருமூச்சுக்களை செவி சாய்க்க முடிந்தது...
ஆனால் அது சரியாக எங்கிருந்து வருகிறதென தெரியாமல் முளித்தவனுக்கு வழி காட்டுவதை போல் சட்டென அங்கு ஒரு தீ பந்து மெதுவாய் எழும்ப இவர்கள் அனைவரும் தீயின் மஞ்சளும் சிகப்பும் கலந்த ஆரஞ்சு நிறத்தில் தெரிந்த சித்தார்த்தின் முகத்தை கண்டனர்...
தன் கரத்தில் மெல்லமாய் ஒரு தீ பந்தை உருவாக்கி அதனால் உருவான சிறு ஒளியில் சித்தார்த்துடன் அனைவரும் குழப்பமாய் அந்த அறையை நோட்டமிட ஏதோ ஒரு திசையிலிருந்து வந்த ஒரு பெரிய நீர் பந்து அனைவருக்கும் முன் ஒளியாய் நின்றிருந்த சித்தார்த்தை மொத்தமாய் நனைத்து விட்டு அவன் தீயை அணைந்து க்ரிஷ்ஷை போல் அவன் இன்னும் நீர் சக்திக்கு பழக்கப்படவில்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தியது...
ஏனெனில் எப்படிப்பட்ட சுனாமியே ஆனாலும் க்ரிஷ்ஷின் அனுமதியில்லாது அவனை சூழ்ந்திருக்கும் தீயோ அவனால் உரு பெற்று அவன் கட்டுப்பாட்டில் இருக்கும் தீயோ அவ்வளவு எளிதில் நீருக்கு அடங்கி அணைந்து போகாது... க்ரிஷ்ஷினால் நீரின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிந்த அளவு சித்தார்த் இன்னும் கற்றுத்தேரவில்லை...
இந்த நீர் தாக்கல் இந்திரனுடைய சிம்மயாளியான இரண்டாம் சிம்மயாளி அகியாய் தான் இருக்கும் என தெரிந்ததுமே அனைவரும் உணர்ந்து கொண்டனர் விகி மட்டுமல்லாது இப்போது யுகி அகியும் உடன் இணைந்து விட்டதென்று
CITEȘTI
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)
Fantezieஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து...