மாயம் - 56

288 30 107
                                    

அற்புத கோட்டை

தர்மன் ஐயா கைதியை போல் சஹாத்திய சூரர்கள் முன் தலை குனிந்து அமர்ந்திருந்தார்... சேவனும் மயூரனும் தர்மன் ஐயாவை கேள்வியுடன் பார்த்தவாறு அமர்ந்திருக்க குருக்களை விட மனமில்லாது ரக்ஷவும் அங்கு தான் அமர்ந்திருந்தான்...

நாயகிகள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றிருந்தனர்... அற்புத கோட்டைக்கு வந்தே மூன்று நாட்களுக்கு மேலானதால் வீட்டையும் பரமாறிக்க வேண்டுமல்லவா...

நீலி ஒரு ஜன்னலருகில் அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்... பிறையோ யானையாளிகளுக்கு போக்குக் காட்டியவாறு அவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள்...

யானையாளிகளும் அவளுக்கு சலைக்காமல் மாறி மாறி பிடிக்கிறேனென அங்குமிங்கும் டங்கு டங்கென தாவிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பிறையை அஷ்வன்த்தின் யானையாளி பிடித்து விட்டது

பிறை தோல்வியை ஒத்து கொண்டதும் நீலியை தேடி வந்தாள்...

பிறை : ஏன்னானது நீலி அண்ணி.. தாம் ஏன் பஞ்சலோக சூரர்கள் விடைபெற்றது முதலிருந்து கவலையுற்றே இருக்கிறீர்...

நீலி : கவலையுறவில்லை பிறை அண்ணி.. குழப்பத்தில் வீற்றுள்ளேன்...

பிறை : யட்சினிகளை பற்றித் தானே...

நீலி : ஆம் அண்ணி.. இரட்சகன்களுக்கு அவர்களுக்காக அம்மூவர் காத்திருக்கின்ற விசனமே தெரியவில்லை... அதை அறிந்த மயூரன் தமையன் மற்றும் சேவன் கூட தர்மன் ஐயா யட்சினிகளை தான் குறிக்கின்றார் என்பதை அறிவிக்காது அமைதி காத்தது இன்னமும் எமது மனதை வாட்டுகிறது..

பிறை : தேவையின்றி உம்மையே குழப்பி கொள்ள வேண்டா அண்ணி.. சேவன் தமையனும் எமது துணைவரும் அமைதி காத்ததன் பின் ஏதேனும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும்.. அதுவே அவர்களை முடக்கியும் வைத்துள்ளது... விரைவிலே மெய்யை அவர்களினூடாகவே அறியலாம்...

நீலி : ஹ்ம் சரி பிறை அண்ணி என ஒரு மனதாய் சமாதானமானாள்...

அர்ஜுன் : தமது பதிலுக்காகவே காத்திருக்கிறோம் ஐயா.. ஷேஷ்வமலையின் உயிரின வம்ச குழந்தைகள் கடத்தப்பட்டதன் காரணம் என்ன

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)Wo Geschichten leben. Entdecke jetzt